ADDED : ஜூன் 08, 2026 11:20 PM
அ நிறம் | அளவு
சிக்கபல்லாபூர்: சிக்கபல்லாபூர் நகரின், ஹாலகானஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் நிர்மலா, 24. இவர் நேற்று மதியம், சிக்கபல்லாபூர் நகரின், தேவனஹள்ளி பஸ் நிலையத்துக்கு வந்தார். பாகேபள்ளி டிப்போவை சேர்ந்த கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்சில் ஏறி அமர்ந்தார். அந்த பஸ்சில், 48 பயணியர் இருந்தனர்.
பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில், நிர்மலா விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார். இதை கண்ட நடத்துநர் சுதாகர், ஓட்டுநர் நாராயணசாமி பஸ்சை நேராக தனியார் மருத்துவமனைக்கு ஓட்டி சென்று, நிர்மலாவை சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மற்ற பயணியரை வேறு பஸ்சில் அனுப்பினர்.
ஓட்டுநர், நடத்துநரின் செயலுக்கு பாராட்டு குவிந்துள்ளது. இவர்கள் சரியான நேரத்தில், நிர்மலாவை மருத்துவமனையில் சேர்த்து, உயிரை காப்பாற்றினர்.
