/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மூதாட்டியை தாக்கி கொள்ளை மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை
/
மூதாட்டியை தாக்கி கொள்ளை மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை
மூதாட்டியை தாக்கி கொள்ளை மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை
மூதாட்டியை தாக்கி கொள்ளை மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை
ADDED : அக் 06, 2025 04:22 AM
தாவணகெரே : வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கிய மர்ம கும்பல், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது.
தாவணகெரே நகரின், காரிக்கூரு கிராஸ் அருகில் வசிப்பவர் உமாபதி, 65. இவர் பெஸ்காமில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி வீரம்மா, 61. இவர்கள் கிராமத்தை விட்டு தள்ளி, தனியாக வீடு கட்டி வசிக்கின்றனர். அக்கம், பக்கத்தில் வீடுகள் அவ்வளவாக இல்லை.
உமாபதி நேற்று முன்தினம் காலை, தோட்டத்தில் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதற்காக சென்றிருந்தார்.
அவரது மனைவி வீரம்மா தனியாக இருந்தார். 11:00 மணியளவில், முன் வாசல் வழியாக வீட்டுக்குள் நுழைந்த மர்ம கும்பல், அவரை கடுமையாக தாக்கியதில் மயங்கி விழுந்தார். அதன்பின் அவர் கழுத்தில் இருந்த தங்கச்செயின், பீரோவில் இருந்த வளையல்கள், மோதிரம், நெக்லெஸ் உட்பட லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பியோடினர்.
மாலை தோட்டத்தில் இருந்து உமாபதி, வீட்டுக்கு வந்த போது மனைவி மயங்கி கிடப்பதும், வீட்டில் கொள்ளை நடந்திருப்பதும் தெரிந்தது. மனைவியை மருத்துவமனையில் சேர்த்தார். ஹடதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
சம்பவம் நடந்த இடத்தை, எஸ்.பி., உமா பிரசாந்த் பார்வையிட்டார்.பின், அவர் அளித்த பேட்டி:
கொள்ளையர்களை கண்டுபிடிக் க, தாவணகெரே ரூரல் டி.எஸ்.பி., தலைமையில், மூன்று குழுக்கள் அமைத்துள்ளோம். விரைவில் குற்றவாளிகளை கண்டு பிடிப்போம்.
அறிமுகம் இல்லாதவர்கள் வீட்டுக்கு வந்தால், கதவை திறக்க கூடாது. அவர்களுடன் பேச கூடாது. சந்தேகத்துக்கு இடமானவர்களாக இருந்தால், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
தனியாக இருக்கும் வீடுகளில், பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும்படி அறிவுறுத்தியும், சிலர் பொருட்படுத்துவது இல்லை. பெரிய, பெரிய வீடுகளில் கூட கேமரா இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.