தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ரவுடி கொலை வழக்கில் கைதான 4 பேருக்கு ஜாமின் குற்றப்பத்திரிகை தாக்கலில் போலீஸ் அலட்சியம்

 ரவுடி கொலை வழக்கில் கைதான 4 பேருக்கு ஜாமின் குற்றப்பத்திரிகை தாக்கலில் போலீஸ் அலட்சியம்

 ரவுடி கொலை வழக்கில் கைதான 4 பேருக்கு ஜாமின் குற்றப்பத்திரிகை தாக்கலில் போலீஸ் அலட்சியம்


ADDED : மார் 14, 2026 06:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2026 06:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் போலீசார் காட்டிய அலட்சியத்தால், பாரதிநகர் ரவுடி சிவகுமார் கொலை வழக்கின் முதல் குற்றவாளி ஜெகதீஷ் உட்பட 4 பேருக்கு, உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது.

பெங்களூரு பாரதிநகரில் வசித்த ரவுடி சிவகுமார் என்ற பிக்லு சிவா, கடந்த ஆண்டு ஜூலை, 15ம் தேதி கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ஐந்தாவது குற்றவாளியாக, கே.ஆர்.புரம் பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜும், முதல் குற்றவாளியாக அவரது ஆதரவாளர் ஜெகதீசும் சேர்க்கப்பட்டனர். இவர்கள் உட்பட, 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

நேற்று முன்தினம் பைரதி பசவராஜுக்கு, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. அதற்கு முன்பாகவே ஜெகதீஷ், கிரண், விமல்ராஜ், மதன் ஆகியோர், ஜாமின் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு செய்தனர். நீதிபதி சுனில் தத் யாதவ் விசாரித்தார்.

நேற்று நடந்த விசாரணையின் போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், மனுதாரர்களுக்கு எதிராக வலுவான ஆதாரம் இருப்பதால், ஜாமின் வழங்கக்கூடாது என, எதிர்ப்பு தெரிவித்தார்.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள் வாதிடுகையில், 'பொதுவாக ஒரு வழக்கில், 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் குறிப்பிட்ட காலம் முடிந்த பின் தாக்கல் செய்து உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு, ஜாமின் வழங்க வேண்டும்' என்றார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு வக்கீல், 'கைதானவர்கள் மீது கோகா எனும், கர்நாடக ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவானது. அதனை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டதால், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தாமதமானது' என்றார். ஆனாலும், மனுதாரர்கள் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி சுனில் தத் யாதவ், ஜெகதீஷ் உட்பட 4 பேருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us