/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அடிக்க வந்த முதல்வரால் விரக்தி போலீஸ் அதிகாரி விருப்ப ஓய்வு
/
அடிக்க வந்த முதல்வரால் விரக்தி போலீஸ் அதிகாரி விருப்ப ஓய்வு
அடிக்க வந்த முதல்வரால் விரக்தி போலீஸ் அதிகாரி விருப்ப ஓய்வு
அடிக்க வந்த முதல்வரால் விரக்தி போலீஸ் அதிகாரி விருப்ப ஓய்வு
ADDED : ஜூலை 02, 2025 11:17 PM

பெங்களூரு: பெலகாவியில், ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் தன்னை முதல்வர் அடிக்க வந்ததால், மன உளைச்சலில் இருந்த தார்வாட் ஏ.எஸ்.பி., நாராயணா பரமனி, விருப்ப ஓய்வு பெற கடிதம் அளித்துள்ளார்.
பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து, நடப்பாண்டு ஏப்ரல் 28ம் தேதி காங்கிரஸ் சார்பில், பெலகாவியில் போராட்டம் நடந்தது. காங்கிரசாரை எதிர்த்து, பா.ஜ.,வினரும் பதிலுக்கு போராட்டம் நடத்தினர்.
போராட்ட மேடையில், முதல்வர் சித்தராமையா உரையாற்றி கொண்டிருந்தபோது, பா.ஜ.,வினரும் அந்த கூட்டத்தில் புகுந்து, அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இதனால், கடுப்பான முதல்வர் சித்தராமையா, பாதுகாப்பில் குளறுபடி செய்ததாக போலீஸ் அதிகாரிகள் மீது கோபமடைந்தார்.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தார்வாட் ஏ.எஸ்.பி., நாராயணா பரமனியை, மேடைக்கு அழைத்து திட்டியதுடன், அவரை அடிப்பதற்கும் கையை ஓங்கினார். இந்த வீடியோ, சமூக வலைதளத்திலும் பரவியது.
முதல்வரின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால், ஏ.எஸ்.பி., நாராயணா பரமனி விரக்தி அடைந்தார்.
இரண்டு மாதங்களாக கடும் மன உளைச்சலில் தவித்தவர், தற்போது பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.
இதற்கான கடிதத்தை அரசுக்கு அனுப்பியுள்ளார். அவரை சமாதானம் செய்ய, உயர் போலீஸ் அதிகாரிகள் முயற்சிக்கின்றனர். 1994ம் ஆண்டு பேட்ச் அதிகாரியான நாராயணா பரமனி, திறமையானவர். 2007ல் நடந்த பிரபல ரவுடி பிரவீன் சிந்த்ரே என்கவுன்டருக்கு தலைமை ஏற்றவர்.