/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தங்கவயலில் பயிற்சி மையம் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு
/
தங்கவயலில் பயிற்சி மையம் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு
ADDED : ஜூலை 02, 2025 06:28 AM

தங்கவயல் : தங்கவயலில் 100 ஏக்கரில் கர்நாடக மாநில ஆயுதப்படை பயிற்சி மையம் அமைய இருக்கும் இடத்தை போலீஸ் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
கர்நாடகாவில் இரண்டு இடங்களில் ஆயுதப் படை அமைக்க, பெங்களூரு ரூரல் மாவட்டம் கூடகுர்கி அவதி கிராம பகுதியில் 218.2 ஏக்கர் நிலம்; தங்கவயல் இண்டஸ்ட்ரியல் காரிடார், இண்டஸ்ட்ரியல் டவுன் ஷிப் அமையும் இடத்தில் ஆயுத படை பயிற்சி நிலையம் அமைக்க 100 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.
இதில் பயிற்சி நிலையம் ஏற்படுத்தி, தங்கவயலில் 1,100 பேருக்கு பயிற்சி, தங்கும் வசதி அமைக்க வேண்டும். இங்கு அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த 50 கோடி ரூபாயில் திட்டமிடப்பட்டுள்ளது.
தங்கவயலில் ஆயுதப்படை பயிற்சி மையம் அமையும் இடத்தை கர்நாடக ஆயுதப்படை ஐ.ஜி.பி., உமேஷ் குமார், ஏ.டி.ஜி.பி., சந்தீப் பாட்டீல், தங்கவயல் எஸ்.பி., சாந்த ராஜு ஆகியோர் பார்வையிட்டனர். திட்டமிடப்பட்டுள்ளபடி கட்டமைப்பு பணிகளை துவக்கி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, ஏ.டி.ஜி.பி., சந்தீப் பாட்டீல் தெரிவித்தார்.