/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
திருமணமான பெண்ணுடன் ஓட்டம்; போலீஸ் ஏட்டு அதிரடி 'சஸ்பெண்ட்'
/
திருமணமான பெண்ணுடன் ஓட்டம்; போலீஸ் ஏட்டு அதிரடி 'சஸ்பெண்ட்'
திருமணமான பெண்ணுடன் ஓட்டம்; போலீஸ் ஏட்டு அதிரடி 'சஸ்பெண்ட்'
திருமணமான பெண்ணுடன் ஓட்டம்; போலீஸ் ஏட்டு அதிரடி 'சஸ்பெண்ட்'
ADDED : டிச 15, 2025 05:06 AM
சந்திரா லே - அவுட்: இரண்டாவது கணவரையும், 12வயது மகனையும் விட்டு விட்டு தங்கநகைகள், பணத்துடன் போலீஸ் ஏட்டுடன் ஓடிய மனைவியை கண்டுபிடிக்கும்படி போலீசில் கணவர் புகார் அளித்துள்ளார்.
மைசூரை சேர்ந்தவர் மோனிகா, 35. முதல் முறை திருமணமான இவர், கணவரை விட்டு பிரிந்தார். வேறு ஒருவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு, 12 வயதில் மகன் உள்ளார். இவர்கள் பெங்களூரின் சந்திரா லே - அவுட்டில் வசித்து வந்தார்.
ரீல்ஸ் வீடியோ மோனிகாவுக்கு ரீல்ஸ் வீடியோ பதிவு செய்து, இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதில் ஆர்வம் அதிகம். இவரது ரீல்ஸ் வீடியோக்கள், ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட்டில் வசிக்கும் ராகவேந்திராவை அதிகம் கவர்ந்தது. இவர் ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட் போலீஸ் நிலையத்தின், ஹொய்சாளா வாகன ஓட்டுநராக பணியில் உள்ளார். இவர் நடப்பாண்டு ஜூனில், மோனிகாவுக்கு, 'பிரென்ட் ரிக்வெஸ்ட்' அனுப்பினார். இதை அவரும் ஏற்றுக்கொண்டார்.
ராகவேந்திராவுக்கும் திருமணமாகி, மனைவியும், ஒரு குழந்தையும் இருந்தும், மோனிகாவிடம் நெருங்கி பழகினார். நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் ஊர் சுற்ற துவங்கினர். இருவரும் சேர்ந்து ரீல்ஸ் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
ஒரு கட்டத்தில் இவர்களுக்குள் நெருக்கம் அதிகமாகி, சேர்ந்து வாழ முடிவு செய்தனர். சில நாட்களுக்கு முன், ஊரை விட்டு ஓடிவிட்டனர். மோனிகா வீட்டை விட்டு செல்லும் போது, 160 கிராம் தங்க நகைகள், 1.80 லட்சம் ரூபாயை எடுத்து சென்றுள்ளார்.
கணவர் புகார் இது குறித்து, சந்திரா லே - அவுட் போலீஸ் நிலையத்தில், மோனிகாவின் கணவர் புகார் செய்துள்ளார். இவ்விஷயம் மேலதிகாரிகளின் கவனத்துக்கு சென்றது. ராகவேந்திரா, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
இது குறித்து, உயர் அதிகாரிகள் கூறியதாவது:
மோனிகாவுக்கு ரீல்ஸ் வீடியோ செய்யும் பழக்கம் இருந்தது. அவ்வப்போது ரீல்ஸ் வீடியோக்களை, இன்ஸ்டாகிராமில் வெளியிடுவார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக, ஏட்டு ராகவேந்திரா அறிமுகமானார். இவர்களுக்குள் நெருக்கம் அதிகமாகி, வீட்டை விட்டு ஓடிவிட்டனர்.
வீட்டில் இருந்த தங்கநகைகள், பணத்தை மோனிகா திருடி சென்றதாக, அவரது கணவர் புகார் அளித்துள்ளார். வழக்கு பதிவு செய்து, விசாரணை நடக்கிறது. மனைவி, குழந்தையை விட்டு விட்டு ஓடிய ராகவேந்திரா சஸ்பெண்ட் செ ய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

