/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
குளிரின் தாக்கம் அதிகரிப்பு; வானிலை மையம் எச்சரிக்கை
/
குளிரின் தாக்கம் அதிகரிப்பு; வானிலை மையம் எச்சரிக்கை
குளிரின் தாக்கம் அதிகரிப்பு; வானிலை மையம் எச்சரிக்கை
குளிரின் தாக்கம் அதிகரிப்பு; வானிலை மையம் எச்சரிக்கை
ADDED : டிச 15, 2025 05:10 AM
பெங்களூரு: 'கர்நாடகாவில் குளிரின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. சில நாட்களுக்கு குளிர்க்காற்று நீடிக்கும். இதில் இருந்து தற்காத்து கொள்ள வேண்டும்' என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி சி.எஸ்.பாட்டீல் கூறியதாவது:
கர்நாடகாவில் நாளுக்கு நாள், குளிரின் தாக்கம் அதிகரிக்கிறது. பனிப்பொழிவு அதிகரிக்கிறது. இந்த சூழ்நிலை ஒவ்வொரு மாவட்டமாக பரவும் அறிகுறி தென்படுகிறது. வட மாவட்டங்களுடன், தென் மாவட்டங்களிலும் குளிர் அலை வீசும். பெங்களூரில் சில நாட்களாக வெப்ப நிலை குறைந்துள்ளது.
குறைந்தபட்ச வெப்பநிலை 12.9 டிகிரி செல்ஷியசாக உள்ளது. நாளையும் (இன்று) குளிர்க்காற்று தீவிரமடையும். மாநிலம் முழுவதும் அடர்த்தியான பனிமூட்டம் நிலவும்.
பாகல்கோட், பெலகாவி, தார்வாட், ஹாவேரி, கதக், கொப்பால், பல்லாரி, சிக்கபல்லாபூர், தாவணகெரே, ஹாசன், ஷிவமொக்கா, விஜயநகர் மாவட்டங்களில் நாளை (இன்று) மிக அதிகமான குளிர் இருக்கும்.
எனவே இந்த மாவட்டங்களுக்கு, 'மஞ்சள் அலெர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது.
உடுப்பி, உத்தரகன்னடா, தட்சிண கன்னடா, துமகூரு, சித்ரதுர்கா, மாண்டியா, மைசூரு, ராம்நகர், சாம்ராஜ்நகர் மாவட்டங்களில் ஓரளவு குளிர் நிலவும். டிசம்பர் 17 க்கு பின், குளிர் நிதானமாக குறையக்கூடும். வெப்பநிலை உயரும்.
தற்போது குளிரின் தாக்கமும், பனிப்பொழிவும் இருப்பதால் மூத்த குடிமக்கள், சிறார்கள் அதிகாலை நடைபயிற்சிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். வெந்நீர் அருந்துவது, ஹீட்டர் பயன்படுத்துவது, கதகதப்பான உடைகள், ஸ்வெட்டர் அணிந்து குளிரில் இருந்து தற்காத்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

