/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சூதாட்டத்தில் பணம் இழப்பு போலீஸ் ஏட்டு தற்கொலை
/
சூதாட்டத்தில் பணம் இழப்பு போலீஸ் ஏட்டு தற்கொலை
ADDED : ஜூலை 16, 2025 11:11 PM

சிக்கபல்லாபூர்: கடன் தொல்லையால் போலீஸ் ஏட்டு துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிக்கபல்லாபூர் மாவட்டம், மஞ்சேனஹள்ளி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்தவர், ராஜசேகர், 45. இவர், நேற்று போலீஸ் குடியிருப்பில் உள்ள தன் அறையில், மின்விசிறியில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விசாரணையில், ராஜசேகர் சமீப காலமாக மொபைல் போன் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் அடிமையானது தெரிந்தது. மேலும், விளையாடுவதற்காக பலரிடமிருந்து லட்சக்கணக்கான ரூபாய் கடனாக வாங்கினார். இந்த கடனை அடைக்க தன் மனைவியின் தங்க நகைகளை அடமானம் வைத்தார்.
இருப்பினும், கடனை அடைக்க முடியவில்லை. இதுகுறித்து, தன் பெற்றோரிடம் அழுது புலம்பி உள்ளார். இறுதியாக தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

