தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஐ.பி.எல்., இறுதி போட்டி ரசிகர்களுக்கு போலீஸ் கட்டுப்பாடுகள்

 ஐ.பி.எல்., இறுதி போட்டி ரசிகர்களுக்கு போலீஸ் கட்டுப்பாடுகள்

 ஐ.பி.எல்., இறுதி போட்டி ரசிகர்களுக்கு போலீஸ் கட்டுப்பாடுகள்


ADDED : மே 30, 2026 02:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 30, 2026 02:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: நடப்பாண்டு ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி, இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. நடப்பு சாம்பியனான பெங்களூரு, மீண்டும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

நாளை நடக்கும் இறுதி போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாதில் உள்ள மோடி மைதானத்தில் நடக்கிறது.

இதை முன்னிட்டு, பெங்களூரு நகர போலீஸ் வெளியிட்டு உள்ள அறிக்கை:

இறுதி போட்டி முடிவு தெரிந்தவுடன், பொது இடங்களில் பொது மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதி இல்லாமல், சாலைகளில் எல்.இ.டி., திரைகளை பொருத்தி, கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப கூடாது.

மால்கள், பப்கள் உட்பட பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போட்டியை திரையிட கூடாது. பட்டாசுகள் வெடிக்கவும், ஆபத்தான பொருட்களை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

நெரிசல் மிகுந்த பகுதிகளில் அமைதியாகவும், நாகரிகமான முறையிலும் நடந்து கொள்ள வேண்டும். போக்குவரத்து போலீசாரின் உத்தரவு, வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

பைக் ஊர்வலம், அதிவேகமாக செல்வது, சாகசம் செய்வது, சாலையை மறிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் மது அருந்த கூடாது. பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி, சண்டையில் ஈடுபடக்கூடாது.

சமூ க ஊடகங்களில் ஆத்திரத்தை துாண்டும் வகையில் பதிவேற்றம் செய்யக்கூடா து அல்லது பொய் பிரசாரம் செய்யக்கூடாது.

இறுதி போட்டி முடிவில், தோற்ற அணியின் ரசிகர்களை கேலி செய்யக்கூடாது.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us