தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ போலீஸ் எஸ்.ஐ., துாக்கிட்டு தற்கொலை

 போலீஸ் எஸ்.ஐ., துாக்கிட்டு தற்கொலை

 போலீஸ் எஸ்.ஐ., துாக்கிட்டு தற்கொலை


ADDED : மே 29, 2026 12:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 29, 2026 12:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெலகாவி: அடுத்த மாதம் டி.எஸ்.பி.,யாக பதவி உயர்வு பெறவிருந்த மாநில பேரிடர் மீட்பு படை எஸ்.ஐ., துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெலகாவி மாவட்டம் ராணி சென்னம்மா நகரை சேர்ந்தவர் ஸ்ரீசைல் சவுகாலா, 37. இவர், எஸ்.டி.ஆர்.எப்., எனும் மாநில பேரிடர் மீட்பு படையின் எஸ்.ஐ.,யாக பணியாற்றி வந்தார். நேற்று காலையில், தன் வீட்டில் உள்ள தன் அறைக்கு சென்று கதவை தாழிட்டு கொண்டார். அறைக்கு சென்றவர் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை.

இதையடுத்து அவரது மனைவி கதவை தட்டி உள்ளார். உள்ளே இருந்து எந்த பதிலும் வரவில்லை. பலமுறை அழைத்தும், கதவை தட்டியும் திறக்கவில்லை. இதனால் பதற்றம் அடைந்த அவர், எஸ்.டி.ஆர்.எப்., படையினருக்கு தகவல் தெரிவித்தார்.

அங்கு வந்த அவர்கள், கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது, ஸ்ரீசைல் சவுகாலா, துாக்கில் தொங்கிய நிலையில் பிணமாக காணப்பட்டார்.

உடனடியாக அவரை மாவட்ட மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

வழக்கு பதிவு செய்த உத்யோக்பாகா போலீசார் விசாரிக்கின்றனர்.

இ வரின் உறவினர்கள் கூறுகையில், 'ஸ்ரீசைல் சிறந்த மனிதர். அவரின் துறையில் அனைவரிடமும் நல்ல மதிப்பு பெற்றவர். முன்னதாக, கே.எஸ்.ஆர்.பி., பயிற்சி மையத்தில் பணியாற்றினார். அடுத்த மாதம் டி.எஸ்.பி.,யாக பதவி உயர்வு பெற விருந்தார். இவருக்கு பிரகாசமான எதிர்காலம் இருந்தது. என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார் என தெரியவில் லை' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us