தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஐ.பி.எல்., டிக்கெட் மோசடி ரசிகர்களுக்கு போலீசார் எச்சரிக்கை

 ஐ.பி.எல்., டிக்கெட் மோசடி ரசிகர்களுக்கு போலீசார் எச்சரிக்கை

 ஐ.பி.எல்., டிக்கெட் மோசடி ரசிகர்களுக்கு போலீசார் எச்சரிக்கை


ADDED : ஏப் 06, 2026 04:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2026 04:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''ஐ.பி.எல்., டிக்கெட் வாங்கும் போது அதிகாரப்பூர்வ இணையதளம், செயலியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்,'' என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட்டை வாங்குவது அசாதாரணமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், டிக்கெட் முன்பதிவு துவங்கப்பட்ட சில நிமிடங்களிலிலே டிக்கெட் முழுதும் விற்று தீர்ந்துவிடுகிறது.

இதனால், கள்ள சந்தையில் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம், குறைந்த விலையில் ஐ.பி.எல்., டிக்கெட் என்ற பெயரில் மோசடிகளும் நடக்கின்றன.

அதாவது, போலியான இணையதளங்களில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. இந்த இணையதளங்கள் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் போலவே வடிவமைக்கப்பட்டிருக்கும். இது, தெரியாமல் பலரும் பணத்தை பறிகொடுத்து வருகின்றனர்.

இது குறித்து பெங்களூரு நகர போலீசார் கூறியதாவது:

அதிகாரப்பூர்வ ஆர்.சி.பி., செயலி, இணையதளத்தில் மட்டுமே டிக்கெட் வாங்க வேண்டும். குறைந்த விலையில் டிக்கெட் என்பதை யாரும் நம்பி ஏமாற வேண்டாம். அதிகாரப்பூர்வமற்ற செயலி, இணையதளங்களில் டிக்கெட் வாங்குவதை தவிர்க்கவும். கள்ள சந்தையிலும் டிக்கெட் வாங்கக்கூடாது.

இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் பண மோசடி நடக்கும் அபாயம் இருக்கிறது. இதை புரிந்து நடக்க வேண்டும். குறிப்பாக, 'புக் மைஷோ' என்ற பெயர் கொண்ட போலி இணையதளத்தில் குறைந்த விலையில் டிக்கெட்டுகளை யாரும் வாங்க வேண்டாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us