/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நேபாளிகளை பணிக்கு நியமிக்கும்போது கவனம் தேவை என போலீசார் எச்சரிக்கை
/
நேபாளிகளை பணிக்கு நியமிக்கும்போது கவனம் தேவை என போலீசார் எச்சரிக்கை
நேபாளிகளை பணிக்கு நியமிக்கும்போது கவனம் தேவை என போலீசார் எச்சரிக்கை
நேபாளிகளை பணிக்கு நியமிக்கும்போது கவனம் தேவை என போலீசார் எச்சரிக்கை
ADDED : ஜூன் 02, 2025 11:12 PM
பெங்களூரு: 'பின்னணி குறித்த விபரம் தெரியாதவர்களை, குறிப்பாக நேபாளிகளை பணிக்கு நியமிக்கும்போது, மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்' என, பெங்களூரு போலீசார் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து, உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
பெங்களூரில் வீட்டுப் பணியாளர்களே, வீடுகளில் கொள்ளை அடிக்கின்றனர். இது பற்றி பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா, பல முறை எச்சரித்துள்ளார்.
ஆனால் இவரது எச்சரிக்கையை, அரசியல்வாதிகள், படித்தவர்களே அலட்சியம் செய்கின்றனர். வேலைக்கு நியமித்த வீடுகளில் பணியாட்களே கொள்ளை அடிக்கும் சம்பவங்கள், நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன.
ஹெச்.ஏ.எல்., போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட சாஸ்திரிநகரில் வசிக்கும் அரசியல் பிரமுகர் ரமேஷ் குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்றிருந்தபோது அவரது வீட்டில் வேலை செய்து வந்த நேபாள தம்பதி, தங்களின் உறவினர்களுடன் சேர்ந்து வீட்டின் பூட்டை உடைத்து, 1.70 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கநகை, 10 லட்சம் ரூபாய் ரொக்கத்தை திருடிக்கொண்டு தலைமறைவாயினர்.
திருப்பதியில் இருந்து திரும்பிய ரமேஷ், ஹெச்.ஏ.எல்., போலீஸ் நிலையத்தில் புகார் செய்த்தார். நேபாள தம்பதியை பற்றி விசாரித்தபோது, அவர்களை பற்றிய எந்த தகவலும், அவருக்கு தெரிந்திருக்கவில்லை.
நேபாள தம்பதி செக்யூரிட்டி பணிக்கும், வீட்டு வேலைக்கும் சேர்ந்தபோது, தங்களின் உண்மையான பெயர்களை மறைத்து, பொய்யான பெயர்களை கூறியுள்ளனர். அவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பதையும் கூறவில்லை.
அவர்களின் அடையாள அட்டை, மொபைல் போன் எண்ணையும் தெரிந்து கொள்ளாமல், வேலைக்கு வைத்துள்ளனர்.
நேபாளிகளை பணிக்கு நியமிக்கும்போது, மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். அவர்களை பற்றிய முழுமையான விபரங்களை தெரிந்து கொள்வது கட்டாயம். இதை பலரும் பொருட்படுத்தாததே, கொள்ளை சம்பவங்களுக்கு காரணமாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.