/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வக்கீல் பலாத்காரம் போலீஸ்காரர் கைது
/
வக்கீல் பலாத்காரம் போலீஸ்காரர் கைது
ADDED : செப் 07, 2025 02:25 AM
பசவேஸ்வராநகர்: திருமணம் செய்வதாகக்கூறி பெண் வக்கீலை பலாத்காரம் செய்து, ஜாதியை காரணம் காண்பித்து திருமணத்திற்கு மறுத்த ஆயுதப்படை போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகல்கோட் மாவட்டம், ஜமகண்டியை சேர்ந்தவர் சித்தேகவுடா என்ற சித்து, 30. மங்களூரு பாண்டேஸ்வரில் ஆயுதப்படை போலீஸ்காரராக வேலை செய்கிறார்.
இவருக்கும், பெங்களூரு பசவேஸ்வராநகரில் வசிக்கும் 27 வயது வக்கீலான இளம்பெண்ணுக்கும் சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பின், இருவரும் காதலித்தனர்.
காதலியை பார்க்க சித்தேகவுடா அடிக்கடி பெங்களூரு வந்தார். பசவேஸ்வராநகரில் உள்ள லாட்ஜில் அறை எடுத்துத் தங்கினர்.
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, காதலியுடன் சித்தேகவுடா உல்லாசமாக இருந்தார். பின், பல காரணங்களை கூறி திருமணத்தை தள்ளிப் போட்டார். இறுதியில் ஜாதியை காரணம் காண்பித்து, திருமணம் செய்ய மறுத்தார்.
கடந்த 29ம் தேதி சித்தேகவுடா மீது பசவேஸ்வராநகர் போலீசில் காதலி புகார் செய்தார்; வழக்குப்பதிவானது. சித்தேகவுடா தலைமறைவானார். நேற்று முன்தினம் பாகல்கோட்டில் கைது செய்யப்பட்டார். அவரை பெங்களூரு அழைத்து வந்து போலீசார் விசாரிக்கின்றனர்.