பணியில் அலட்சியமாக இருந்த போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்'
பணியில் அலட்சியமாக இருந்த போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்'
ADDED : மார் 29, 2026 03:39 AM

அ நிறம் | அளவு
தேவனஹள்ளி: கடமை தவறிய விஸ்வநாத்நகர் போலீஸ்காரர் ஜி.கே.அசோக் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ரம்ஜான் பண்டிகையின் போது, விஸ்வநாத்நகர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொழுகைக்காக ஒரு பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இந்தப் பந்தல் வேறொரு சமூகத்தைச் சேர்ந்த சிலரால் கிழிக்கப்பட்டது. இந்த நிலை குறித்து தகவல்களை சேகரிக்க போலீஸ்காரர் ஜி.கே.அசோக் தவறியதாக குற்றம் சாட்டப்பட்டார். இது தொடர்பாக அவருக்கு அனுப்பப்பட்ட நோட்டீசை பெற்றுக்கொள்ள மறுத்ததுடன், பதிலளிக்கவும் இல்லை. அதிகாரிகளையும் விமர்சித்ததாக கூறப்படுகிறது.
இதனால், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
