அரசியல் மாசடைந்துள்ளது காங்., ஹரிபிரசாத் ஒப்புதல்
அரசியல் மாசடைந்துள்ளது காங்., ஹரிபிரசாத் ஒப்புதல்
ADDED : ஜூலை 29, 2026 02:47 AM

பெங்களூரு: ''அரசியல் களம் மாசடைந்துள்ளது என, முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறியதை ஒப்பு கொள்கிறேன்,'' என, காங்கிரஸ் தலைவர் ஹரிபிரசாத் கூறியுள்ளார்.
பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:
கர்நாடக அரசியல் களம் மாசடைந்து உள்ளதால், அடுத்த தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்று முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். அவர் கூறியதை நான் வரவேற்றது, உண்மை தான் என ஒப்பு கொள்கிறேன்.
கடந்த, 1990க்கு முன்பு அரசியல் களம் இப்படி மோசமாக இருந்தது இல்லை. தற்போது அரசியல் பணம், அதிகாரத்தால் நிறைந்துள்ளது.அதிகாரத்தை தக்க வைத்து கொள்ள பணம், மதம், ஜாதி, மொழியை பயன்படுத்துகின்றனர். இது, துரதிர்ஷ்டவசமானது.
சித்தராமையா இனி தேர்தலில் போட்டியிடுவாரா, இல்லையா என்பது பற்றி எனக்கு தெரியாது.
அவரது முடிவு பற்றி நான் கருத்து சொல்லவும் மாட்டேன். மக்கள் நலனுக்காக தொடர்ந்து போராடுவார் என்று நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
