ADDED : ஜூலை 29, 2026 02:48 AM

அமைச்சர் பதவி
எனக்கு கிடைத்த தகவலின்படி இந்த வார இறுதிக்குள் அமைச்சரவை விரிவாக்கம் நடக்கும். மைசூரை சேர்ந்த சித்தராமையா முதல்வராக இருந்ததால், எனக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. தற்போது சிவகுமார் அமைச்சரவையில் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது.கட்சிக்காக எனது உழைப்பு பற்றி மேலிட தலைவர்களுக்கு நன்கு தெரியும். அமைச்சர் பதவிக்காக டில்லி செல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
- தன்வீர் செய்ட்,
காங்., - எம்.எல்.ஏ., நரசிம்மராஜா தொகுதி.
உள்ளங்கை புண்
'நீட்' தேர்வு முறைகேட்டிற்கு எதிராக போராடிய, காங்கிரசின் ராகுல், கே.பி.எஸ்.சி., முறைகேட்டிற்கு எதிராக போராட வருவாரா... சித்தராமையா விட சிவகுமார் காங்கிரஸ் மேலிடத்திற்கு அதிக கறுப்பு பணம் கொடுக்கிறார். மாநிலத்தில் வறட்சியால் பயிர்கள் சேதத்தை 'ட்ரோன்' மூலம் கணக்கெடுப்பது, உள்ளங்கையில் உள்ள புண்ணை கண்ணாடி வழியாக பார்ப்பது போன்றது. வளர்ச்சி பணிகள் மந்தமடைந்துள்ளது. அரசு மீது மக்கள் அதிருப்தி அதிகரிக்கிறது.
- ஸ்ரீராமுலு,
முன்னாள் அமைச்சர், பா.ஜ.,
