பொள்ளி ராமசாமி ரகுபதிக்கு மொழிபெயர்ப்பாளர் விருது
பொள்ளி ராமசாமி ரகுபதிக்கு மொழிபெயர்ப்பாளர் விருது
ADDED : செப் 30, 2026 03:43 AM

பெங்களூரு: தமிழ் கவிஞர் ரா.முத்துநாகு எழுதிய, 'சுழுந்தீ' நாவலை, தெலுங்கில் மொழிபெயர்த்த பொள்ளி ராமசாமி ரகுபதிக்கு சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது - 2026 வழங்கப்பட்டது.
பெங்களூரு கன்னட பவனில், திராவிட மொழி பெயர்ப்பாளர்கள் சங்கத்தின் ஐந்தாவது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. சங்கத்தின் அதிகாரபூர்வ இணையதள பக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது. கூட்டத்தில் நடந்த பஞ்சமொழி கவியரங்கில் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், துளு ஆகிய ஐந்து திராவிட மொழிகளை சேர்ந்த, 15 கவிஞர்கள் கலந்து கொண்டனர். இலக்கிய கலந்துரையாடல் நடந்தது.
தமிழ் கவிஞரும், எழுத்தாளருமான ரா.முத்துநாகு எழுதிய, சு ழுந்தீ நாவலை, தெலுங்கில் மொழி பெயர்த்த, மொழி பெயர்ப்பாளர் பொள்ளி ராமசாமி ரகுபதிக்கு, சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருதுடன், 11 ஆயிரத்து 111 ரூபாய் ரொக்கம், சான்றிதழ், நினைவு சின்னம் வழங்கி, கன் னட வளர்ச்சி ஆணைய தலைவர் புருஷோத்தம் பிளிமனே கவுரவித்தார்.
சிறப்பு விருந்தினராக கன்னட கவிஞர் ராமநாத் கலந்து கொண்டார்.
சங்கத்தின் செயல்பாடுகள், உறுப்பினர்கள் விபரங்கள், மொழிபெயர்ப்பு பணிகளை உலகளவில் பரவலாக அறிமுகப்படுத்தும் வகையில், இணையதள பக்கம் துவங்கப்பட்டுள்ளதாக, சங்கத்தின் தலைவர் டாக்டர் சுஷ்மா சங்கர் கூறினார்.
ஏற்பாடுகளை, சங்க ஆலோசகர் டாக்டர் நா.தா.ஷெட்டி, செயலர் கே.பிரபாகரன், பொருளாளர் வி.எஸ்.ராகேஷ், துணை தலைவர் சிவகுமார், செயற்குழு உறுப்பினர் ரெபின் ரவீந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.
