தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ காங்., - எம்.எல்.ஏ., ஈஸ்வருக்கு சிக்கபல்லாபூரில் கடும் எதிர்ப்பு

 காங்., - எம்.எல்.ஏ., ஈஸ்வருக்கு சிக்கபல்லாபூரில் கடும் எதிர்ப்பு

 காங்., - எம்.எல்.ஏ., ஈஸ்வருக்கு சிக்கபல்லாபூரில் கடும் எதிர்ப்பு


ADDED : செப் 30, 2026 03:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2026 03:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: அடுத்த சட்டசபை தேர்தலில், சிக்கபல்லாபூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வருக்கு, மீண்டும் 'சீட்' கொடுக்க கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சிக்கபல்லாபூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர், 41. பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் பலிஜா ஜாதியை சேர்ந்தவர். 2023 சட்டசபை தேர்தலில் பலம் வாய்ந்த, பா.ஜ., வேட்பாளர் சுதாகரை வீழ்த்தி வெற்றி பெற்றதால், பிரதீப் ஈஸ்வருக்கு, கட்சிக்குள் நல்ல பெயர் உள்ளது.

சித்தராமையா, சிவகுமாரை விமர்சிக்கும் பா.ஜ., தலைவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரதீப் ஈஸ்வர் பேசி வருகிறார். ஆனாலும், காங்கிரசின் உள்குத்து அரசியலில் இருந்து பிரதீப் ஈஸ்வரும் தப்பவில்லை. இவருக்கும், முன்னாள் எம்.எல்.ஏ., எம்.சி.சுதாகருக்கும் இடையில் நீயா, நானா போட்டி எழுந்துள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் எம்.சி.சுதாகர் தலைமையில், காங்கிரஸ் தலைவர் ஹரிபிரசாத்தை, சிக்கபல்லாபூர் மாவட்ட காங்கிரசார் சந்தித்து பேசினர். அப்போது, பிரதீப் ஈஸ்வர், தொகுதியில் சரியாக பணியாற்றவில்லை; கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு மதிப்பு கொடுப்பது இல்லை; உள்ளாட்சி தேர்தலில் கட்சியை வெற்றி பெற வைப்பதில் ஆர்வம் காட்டவில்லை; வாய்க்கு வந்தபடி பேசி, கட்சிக்கு பிரச்னையை ஏற்படுத்த பார்க்கிறார்.

இதனால், வரும், 2028 சட்டசபை தேர்தலில், அவருக்கு மீண்டும் சீட் வழங்க கூடாது. அப்படி வழங்கினால் சிக்கபல்லாபூரில் காங்கிரஸ் தோற்பது உறுதி என்று கூறினர்.

இது, பிரதீப் ஈஸ்வருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் ஹரிபிரசாத்தை சந்தித்து தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us