ADDED : செப் 30, 2026 03:42 AM

மைசூரு: தன் காதலை ஏற்க மறுத்ததால் கோபமடைந்த வாலிபர், தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து, இளம்பெண்ணை கட்டிபிடிக்க முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாண்டியா மாவட்டம், மலவள்ளிதாலுகாவை சேர்ந்தவர் சந்தன். மைசூர் நகரின் விஜயநகரில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி, பொறியியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர், கடந்த சில நாட்களாக இளம்பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
தன் காதலை, இளம்பெண்ணிடமும் கூறியுள்ளார். அவரோ, தன் படிப்பில் கவனம் செலுத்துவதால், காதலை ஏற்க மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த சந்தன், நேற்று மாலை, இளம் பெண் கல்லுாரி முடித்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர் முன் வந்த சந்தன், தன் மீது பெட்ரோல் ஊற்றி, தீ வைத்தார். பின், இளம்பெண்ணை கட்டிப்பிடிக்க முயற்சித்தார். ஆபத்தை உணர்ந்த இளம்பெண், அவரை தள்ளி விட்டு தப்பினார்.
ஆனாலும், அவரின் உடலில், 20 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதுபோல, 80 சதவீதம் தீக்காயத்துடன் மைசூரு நகரின், கே.ஆர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சந்தன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இளம்பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், சந்தன் மீது விஜயநகர் போலீசார் வழக் கு பதிவு செய்துள்ளனர். பட்டப்பகலில் ஏற்ப ட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
