ADDED : செப் 30, 2026 03:41 AM
அ நிறம் | அளவு
கோலார்: கோலார் மாவட்டத்தில் பா.ஜ., புத்துயிர் பெறுவதற்காக, 'விஜய சங்கல்ப' பாதயாத்திரை அக்டோபர் 1ம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து கோலார் மாவட்ட பா.ஜ., தலைவர் ஓம்சக்தி சலபதி நேற்று அளித்த பேட்டி:
ஓட்டுச்சாவடி விஜய சங்கல்ப யாத்திரை என்ற பெயரில், கோலார் மாவட்டத்தின் முல்பாகலின் குருடுமலை கணபதி கோவிலில் அக்டோபர் 1ம் தேதி சிறப்பு பூஜைகள் செய்து மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, தொடங்கி வைக்கிறார்.
கோலாரில் அக்டோபர் 1ல் தொடங்கி, அக்டோபர் 10 வரை, 16 சட்டசபைத் தொகுதிகளில் விஜய சங்கல்ப யாத்திரை நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
