தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சித்தராமையா சிலையை மீண்டும்  நிறுவ கோரி ஆதரவாளர்கள் போராட்டம்

 சித்தராமையா சிலையை மீண்டும்  நிறுவ கோரி ஆதரவாளர்கள் போராட்டம்

 சித்தராமையா சிலையை மீண்டும்  நிறுவ கோரி ஆதரவாளர்கள் போராட்டம்


ADDED : செப் 30, 2026 03:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2026 03:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கலபுரகி: அகற்றப்பட்ட சித்தராமையாவின் சிலையை, அதே இடத்தில் மீண்டும் நிறுவக்கோரி, அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கலபுரகியில், கர்நாடக உயர் நீதிமன்ற கிளை உள்ள பகுதியான சித்தராமையா சதுக்கத்தில், முன்னாள் முதல்வர் சித்தராமையா வின், 9 அடி உயரமுள்ள தங்க நிறத்திலான சிலை, கடந்த 16ம் தேதி இரவோடு, இரவாக வைக்கப்பட்டது. இதையறிந்த, மாநகராட்சி அதிகாரிகள் கடந்த 17ம் தேதி சிலையை அகற்றினர். இதையடுத்து, அப்பகுதியில் மீண்டும் சிலையை நிறுவக்கோரி, சித்தராமையாவின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கலபுரகி சலோ எனும் பெயரில் கர்நாடக மாநில குருபர் சங்கத்தினர், அவரது ஆதரவாளர்கள் நேற்று மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். இதில், பீதர், யாத்கிர் மாவட்டத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.

கலபுரகி நகரில் உள்ள சங்கொல்லி ராயண்ணா சிலையிலிருந்து ஏராளமானோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி பேரணி சென்றனர். அவர்கள் கையில் சித்தராமையா முகம் கொண்ட மஞ்சள் நிற கொடி, இசை கருவிகளுடன் சென்றனர்.

மாநகராட்சி நிர்வாகம், மாநில அரசை கண்டித்து கோஷங்கள் எழு ப்பியவாறு சென்றனர்.மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றதால், அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இது பர பரப்பை ஏற்படுத்தியது.

கர்நாடக மாநில குருபர் சங்க தலைவர் பி.டி.ஜகதீஷ் கூறுகையில், “அகற்றப்பட்ட சிலையை, மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும். 15 நாட்களுக்குள் சிலை நிறுவப்படவில்லை என்றால், மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்,” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us