தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ புனித வளனார் பல்கலையில் 'பொங்கல்' ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாட்டம்

 புனித வளனார் பல்கலையில் 'பொங்கல்' ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாட்டம்

 புனித வளனார் பல்கலையில் 'பொங்கல்' ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாட்டம்


ADDED : ஜன 11, 2026 05:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 11, 2026 05:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: புனித வளனார் பல்கலைக்கழகத்தின் தமிழ் சங்கம் சார்பில் நடந்த பொங்கல் பண்டிகை, ஆட்டம், பாட்டத்துடன் கோலாகலமாக நடந்தது.

பெங்களூரு சாந்தி நகர் லால்பாக் டபுள் ரோட்டில், புனித வளனார் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலை கழகத்தின் தமிழ் சங்கம் சார்பில், ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தா ண்டுக்கான பொங்கல் பண்டிகை நேற்று முன்தினம் துவங்கியது. அன்று மாணவியருக்கான கோலப்போட்டி நடந்தது. இதில் ஆர்வலமுடன் பலர் கோலம் போட்டனர்.

நேற்று பொங்கல் பண்டிகை கொண்டாட்டம், தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது. விழாவை, திருவள்ளுவர் சங்க தலைவரும், தாய்மொ ழி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளருமான எஸ்.டி.குமா ர், குறும் பட இயக்குனர் ரிச்சர்ட் விஜயகுமார், ஒருங்கிணைப்பாளர் முனைவர் சர ளா ஆறுமுகம், தன்னுரிமை மனமகிழ் மன்ற தலைவர் ராஜசேகரன் துவக்கி வைத்தனர். விழாவில், அரையாண்டு மலரை எஸ்.டி.குமார் வெளியி ட்டார்.

தவறுவதில்லை பின், அவர் பேசியதாவது:

தமிழர்கள் உலகம் முழுதும் வாழ்கின்றனர். அவர்கள் எங்கு வாழ்ந்தாலும், தங்களின் பண்பாடு, நாகரீகம், அடையாளம் ஆகியவற்றை காப்பதில் தவறுவதில்லை.

அந்த வகையில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ் சங்கம் பொங்கல் விழாவை சிறப்பாக நடத்தி வருகிறது. இந்த கல்வி நிறுவனத்துடன், பெங்களூரு திருவள்ளுவர் சங்கம், தாய்மொழி கூட்டமைப்பு இணைந்து, விரைவில் உலக திருக்குறள் மாநாட்டை நடத்த உள்ளது.

இம்மாநாட்டை நடத்த பல்கலைக்கழக துணைவேந்தரும், நிர்வாகத்தினரும் முழு ஒத்துழைப்பு அளித்து உள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

'நில் கவனி நேசி' குறும்பட இயக்குனர் ரிச்சர்ட் விஜயகுமார் சமீபத்தில் இயக்கிய 'நில் கவனி நேசி' என்ற குறும்படம், நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதில், 'பத்மஸ்ரீ' விருது பெற்ற நடிகர் பாஸ்கர், போக்குவரத்து போலீஸ் அதிகாரியாக நடித்து உள்ளார்.

இரு சக்கர வாகனத்தில், ஹெல்மெட் அணியாமல், வேகமாக செல்வதால், இந்த உலகத்தில் நீங்க பார்க்காததை, இளைஞருக்கு எடுத்துரைக்கும்' அதிகாரியாக சிறப்பாக நடித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தியிருந்தார். இதற்கு மாணவர்களின் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.

பின், ரிச்சர்ட் விஜயகுமார் பேசியதாவது:

ஆரம்பம் முதலே எனக்கு நானே சொல்லிக்கொள்வது, 'சிறந்த படம், சிறந்த படைப்பை படைத்தால், உங்களுக்கு பின்னாலும் இந்த உலகம் போற்றும்'. அது இன்று நடக்கிறது; நடந்து கொண்டே இருக்கிறது.

இந்த குறும்படத்தின் நோக்கம், நம்மால் யாருக்கும் எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பது தான். இதை எப்படி சொன்னால் மக்கள் ஏற்பார்கள் என்று யோசித்தபோது, திரைப்படம் தான் சிறந்தது என்று தோன்றியது.

அதில் ஒரு பெண் எழுதிய கமென்டில், 'என் தந்தை சாலையில் நடந்து செல்லும் போது, இரு சக்கர வாகனத்தில் வந்த கோகுல் என்ற இளைஞர் மோதியதில், என் தந்தை சம்பவ இடத்தில் உயிரிழந்தார்' என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு நான், 'இந்த வீடியோ கோகுலை சென்றடையும் என்று நம்புகிறேன்' என்று பதிவிட்டிருந்தேன்.

இந்த வேளையில், இதுபோன்ற படத்துக்காக எத்தனை நாட்களும், எவ்வளவு பணமும் செலவழிக்கலாம் என்று தோன்றியது.

மறக்க முடியாத நாள் பல்கலைக்கழகத்தின் தமிழ் சங்க நிர்வாகிகள், இதுபோன்று விழாக்கள் நடத்துவதை பார்த்தேன். இந்த நாளை என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக மாற்றி உள்ளீர்கள்.

என் தந்தை, தமிழ் வார இதழில், புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்தார். கொரோனாவின் போது அவரை இழந்துவிட்டேன். எனக்கு தொற்று ஏற்பட்டதால், என் தாயும், தங்கையும் வீட்டின் முதல் மாடியில் இருந்தனர். நான் அறையில், தனிமையில் இருந்தேன்.

அப்போது, என் தந்தை பணியாற்றிய அலுவலகத்தில் இருந்து, அவர் எழுதிய புத்தகத்தை வழங்கினர். அதுவரை எனக்கு தமிழ் எழுத்து கூட்டி படிக்க மட்டுமே தெரியும். என் தந்தை என்ன எழுதி உள்ளார் என்பதை தெரிந்து கொள்ள, யாருடைய உதவியும் இல்லாமல், எழுத்து கூட்டி படித்து, இன்று கவிதை எழுதும் அளவுக்கு வளர்ந்துள்ளேன். எனது ஒவ்வொரு கவிதைக்கும் வரவேற்பு கிடைத்து உள்ளது.

அதில் ஒன்று, 'தற்கொலைக்கு முன் தனக்கு பிடித்த உணவகத்தில் உணவு சாப்பிட ஒருவன் சென்றான். அங்கு உணவு பரிமாற வந்த ஊழியர் ஒருவர், என்னை பார்த்து 'நலமாக இருக்கிறீர்களா, எல்லாம் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்' என்றார்.

அப்போது தான், என்னை நலம் விசாரிக்க கூட இந்த உலகில் ஒருவர் இருக்கலாம். தற்கொலை தள்ளி வைக்கப்பட்டுள்ளது' என்று எழுதினேன். பலரும் பாராட்டி, பதில் அனுப்பியிருந்தனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதனை தொடர்ந்து மாணவியரின் ஒயிலாட்டம், தமிழ் சங்கத்தின் 'யாழ்' இசை குழுவினரின், 20 நிமிட 'நான் ஸ்டாப்' மாணவர்களை உற்சாகப்படுத்தியது. மாணவர் ஆல்வினின் 'ஸ்டாண்ட் அப் காமெடி'; மாணவ - மாணவியரின் 'பேஷன் ஷோ' நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us