/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பொங்கல் விற்பனை அமோகம்: களைகட்டிய மார்க்கெட்டுகள்
/
பொங்கல் விற்பனை அமோகம்: களைகட்டிய மார்க்கெட்டுகள்
பொங்கல் விற்பனை அமோகம்: களைகட்டிய மார்க்கெட்டுகள்
பொங்கல் விற்பனை அமோகம்: களைகட்டிய மார்க்கெட்டுகள்
ADDED : ஜன 15, 2026 07:09 AM

பெங்களூரு: பெங்களூரில் பொங்கல் பண்டிகை களை கட்டியுள்ளது. அனைத்து மார்க்கெட்டுகளிலும், மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. பண்டிகைக்கு தேவையான கரும்பு, மஞ்சள் கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு உட்பட, மற்ற பொருட்கள் விற்பனை ஜோராக நடக்கிறது.
சாதாரண நாட்களிலேயே, பெங்களூரின் மார்க்கெட்களில் மக்கள் அதிகமாக தென்படுவர். பொங்கல் பண்டிகை என்பதால், பெங்களூரின் கே.ஆர்.மார்க்கெட், யஷ்வந்த்பூர், மடிவாளா, மல்லேஸ்வரம், சிவாஜிநகர், காந்தி பஜார் உட்பட, அனைத்து மார்க்கெட்களிலும் விற்பனை களை கட்டியுள்ளது. ஜெயநகர், யஷ்வந்த்பூர், ராஜாஜிநகர், சாம்ராஜ்பேட் சாலைகளில் தற்காலிகமாக மினி மார்கெட் உருவாகியுள்ளது.
பொங்கலுக்கு முக்கிய தேவையான கரும்புகள், லோடு கணக்கில் வந்திறங்கியுள்ளன. எள், வெல்லம் கலந்த பொட்டலங்கள், சர்க்கரை, வெல்ல அச்சுகள் விற்கபடுகின்றன. ஒரு கிலோ எள், வெல்ல கலவை 320 ரூபாய் முதல், 350 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அரை கிலோ சர்க்கரை அச்சுகள், கிலோவுக்கு 150 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. இரட்டை கரும்புகளின் விலை 120 ரூபாய் வரை உள்ளது.
இன்று பொங்கல் என்பதால், கரும்பு விலை மேலும் அதிகரித்துள்ளது.
பலரும் பண்டிகைக்கு தேவையான பொருட்களை, நேற்றே வாங்கினர். மார்க்கெட்களில் அதிகமான மக்கள் குவிந்திருந்தனர். வழக்கம் போன்று பூக்கள் உட்பட, மற்ற பொருட்களின் விலையை வியாபாரிகள், இரட்டிப்பாக அதிகரித்திருந்தனர். பண்டிகை என்பதால், விலை உயர்வை பொருட்படுத்தாமல், தேவையான பொருட்களை மக்கள் வாங்கி சென்றனர்.

