/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பா.ஜ., மன்னிப்பு கேட்க பொன்னண்ணா வலியுறுத்தல்
/
பா.ஜ., மன்னிப்பு கேட்க பொன்னண்ணா வலியுறுத்தல்
ADDED : ஜூலை 23, 2025 08:44 AM

பெங்களூரு: ''முடா வழக்கில் மூக்கு அறுபட்ட பா.ஜ.,வினர், மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்,'' என்று முதல்வரின் சட்ட ஆலோசகர் பொன்னண்ணா வலியுறுத்தி உள்ளார்.
முடா முறைகேட்டில், சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்துள்ளதாக கூறி, முதல்வர் சித்தராமையா மனைவி பார்வதி, அமைச்சர் பைரதி சுரேஷ் ஆகியோருக்கு 'ஈடி' எனும் அமலாக்க துறை சம்மன் அனுப்பியிருந்தது.
இந்த சம்மனை ரத்து செய்த கர்நாடகா உயர் நீதிமன்ற உத்தரவை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததுடன், ஈடியை வறுத்தெடுத்துள்ளது.
இது தொடர்பாக விராஜ்பேட்டை காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வும், முதல்வரின் சட்ட ஆலோசகருமான பொன்னண்ணா அளித்த பேட்டி:
நீதித்துறை அமைப்பு மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இதை அரசியலாக்க வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. இது நாடு முழுதும் பொருந்தும், அவர்களுக்கு மனசாட்சி இருந்தால், பொய் பேசுவதை நிறுத்த வேண்டும்.
முடா வழக்கில் முதல்வருக்கும், அவரது மனைவிக்கும் எந்த பங்கும் இல்லை. பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தும் பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்களுக்கு, உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒரு பாடமாக இருக்கும்.
இனி பா.ஜ., - ம.ஜ.த.,வினர் எச்சரிக்கையுடன் அறிக்கையை வெளியிட வேண்டும். அதுபோன்று, பொய் குற்றச்சாட்டுகளை சுமத்திய எதிர்க்கட்சி தலைவர் அசோக், மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா பதவி விலக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.