தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெண்களின் உள்ளாடைகள் திருடிய ஆபாச நபர் கைது

 பெண்களின் உள்ளாடைகள் திருடிய ஆபாச நபர் கைது

 பெண்களின் உள்ளாடைகள் திருடிய ஆபாச நபர் கைது


ADDED : செப் 09, 2026 11:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 09, 2026 11:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாவணகெரே: மகளிர் விடுதியில், பெண்களின் உள்ளாடைகளை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

தாவணகெரே மாவட்டம், சுல்லியாவில் உள்ள பெல்லாரே அரசு மகளிர் விடுதியில் தங்கியிருக்கும் பெண்களின் ஆடை, உள்ளாடைகள் சில நாட்களாக மாயமாகின. இது, விடுதியில் தங்கியிருந்த பெண்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

விடுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை விடுதி கண்காணிப்பாளர்கள் ஆய்வு செய்தனர். அப்போது, இரவு நேரங்களில் யாரோ ஒருவர், விடுதிக்குள் திருட்டுத்தனமாக நுழைந்து உள்ளாடைகளை திருடுவது தெரிந்தது.

இதுகுறித்து, உடனடியாக பெல்லாரே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த நபரை பிடிக்க நேற்று முன்தினம் இரவு விடுதியில் போலீசார் காத்திருந்தனர். அப்போது, வழக்கம் போல உடைகளை திருட, மதில் ஏறி குதித்தவரை போலீசார் கைது செய்தனர்.

உடைகளை திருடியது புத்துார் கோல்திகேவை சேர்ந்த ராமசந்திரா, 35, என தெரிந்தது. இவர், பெண்களின் உள்ளாடைகளை திருடி, தன் பாலியல் இச்சையை தீர்த்து கொள்ள முற்படுவது வழக்கம் என போலீசார் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us