/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தபால் அலுவலகங்கள் 2 நாட்கள் மூடல்
/
தபால் அலுவலகங்கள் 2 நாட்கள் மூடல்
ADDED : ஜூன் 23, 2025 11:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: ஹெச்.ஏ.எல்., தலைமை தபால் அலுவலகம், ஜாலஹள்ளி தலைமை தபால் அலுவலகம், பசவனகுடி தலைமை தபால் அலுவலகம் ஆகியவற்றிலும், அதனுடன் தொடர்புடைய துணை, கிளை தபால் அலுவலகங்களிலும், மேம்பட்ட அஞ்சல் தொழில்நுட்பம் 2.0க்கான புதுப்பித்தல் பணிகள் நடப்பதால் இன்றும், நாளையும் மேற்கண்ட தபால் அலுவலகங்கள் இயங்காது.
எனவே, வாடிக்கையாளர்கள் பெங்களூரு பொது தலைமை தபால் அலுவலகம், ஆர்.டி., நகர் தலைமை தபால் அலுவலகம், ஜெயநகர், ராஜாஜிநகர், சென்னபட்டணா தலைமை தபால் அலுவலகங்கள், அதன் துணை, கிளை அலுவலகங்களை பயன்படுத்தலாம் என தபால் துறை கேட்டுக் கொண்டு உள்ளது.