/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தபால் துறை பணிகள்: ஜோதி ராதித்யா பெருமிதம்
/
தபால் துறை பணிகள்: ஜோதி ராதித்யா பெருமிதம்
ADDED : ஜூலை 11, 2025 04:44 AM

பெங்களூரு: ''இந்திய தபால் துறை போன்ற விநியோக நிறுவனம், உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லை,'' என, மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்தார்.
பெங்களூரு புட்டண்ண செட்டி டவுன் ஹாலில் நேற்று நடந்த 'கிராமின் தக் சேவாக்ஸ் சம்மேளனம்' நிகழ்ச்சியை துவக்கிவைத்து, மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா பேசியதாவது:
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலும்; பரூச்சில் இருந்து த்வாங்க் வரையிலும் 1.64 லட்சம் தபால் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
என்ன தான் தபால் நிலையங்களில் நவீன தொழில்நுட்பத்தை கொண்டு வந்தாலும், அதை பயன்படுத்துவதை தபால் ஊழியர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
உலகின் மிகப்பெரிய தளவாட நிறுவனமாக இந்திய தபால் துறை விளங்குகிறது. நம்மை தவிர, வேறு யாரிடமும் இதை செய்யும் மனித வளங்கள் இல்லை.
அதேவேளையில், முன்னேற்றத்தை அடைய, புதுமைகளை உருவாக்க வேண்டும். உற்பத்தி திறன் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.
இவ்வாறு பேசினார்.