ADDED : ஜூலை 05, 2025 11:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தங்கவயல்: மின் கம்பங்கள், மின் கம்பிகள் மாற்றுதல், பராமரிப்புப் பணிகள் நடப்பதால் தங்கவயலில் நாளை மின் தடை செய்யப்படுகிறது.
தங்கவயல் பெஸ்காம் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
உயர் மின் அழுத்தம் உள்ள மின்கம்பங்கள் இடமாற்றம், மின் இணைப்பு தரும் மின் கம்பிகளை மாற்றும் பணிகளுடன் பராமரிப்புப் பணிகளும் நடப்பதால் 7ம் தேதி காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.
இதனால், உரிகம் பேட்டை, சோமேஸ்வரர் பிளாக், மஞ்சுநாத் நகர், பெத்தப்பள்ளி, அசோக் நகர், சாமிநாதபுரம் ஆகிய இடங்களில் மின் தடை செய்யப்படுகிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.