/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மைசூரில் சில பகுதிகளில் இன்று மின் தடை
/
மைசூரில் சில பகுதிகளில் இன்று மின் தடை
ADDED : ஜன 11, 2026 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மைசூரு: 'விடுமுறை நாளான இன்று, மைசூரில் காலை முதல் மாலை வரை குறிப்பிட்ட சில இடங்களில் மின்சாரம் தடை செய்யப்படுகிறது' என, சாமுண்டீஸ்வரி மின் வினியோக நிறுவனம் அறிவித்து உள்ளது.
அதன் அறிக்கையில் கூறியுள்ளதாவது:
விஜயநகர் மின் வினியோக மையத்துக்கு உட்பட்ட பகுதியில், இன்று பூமிக்கடியில் மின் ஒயர்கள் பதிக்கும் பணி நடக்கிறது. எனவே, யாதவகிரி இன்டஸ்டிரியல் பகுதி, மஞ்சுநாதபுரா, ஜாவா சதுக்கம், ஜாய் ஐஸ் கிரீம் பேக்டரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், இன்று காலை 11:00 முதல் மாலை 5:00 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

