/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பிறந்த நாளில் சிறையில் பிரஜ்வல்: சமூக வலைதளங்களில் கிண்டல்
/
பிறந்த நாளில் சிறையில் பிரஜ்வல்: சமூக வலைதளங்களில் கிண்டல்
பிறந்த நாளில் சிறையில் பிரஜ்வல்: சமூக வலைதளங்களில் கிண்டல்
பிறந்த நாளில் சிறையில் பிரஜ்வல்: சமூக வலைதளங்களில் கிண்டல்
ADDED : ஆக 06, 2025 08:59 AM

பெங்களூரு : தன் 35வது பிறந்த நாளை சிறையில் கழித்த பிரஜ்வல் ரேவண்ணாவை, சமூக வலைதளங்களில் பலரும் கேலி செய்து வருகின்றனர்.
பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரனும், முன்னாள் ம.ஜ.த., - எம்.பி.,யுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சாகும் வரை சிறை தண்டனை வழங்கி, கடந்த சனிக்கிழமை மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
பாலியல் வழக்குகள் தொடர்பாக கடந்த ஆண்டில் பிரஜ்வல் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். விசாரணை கைதியாக இருந்த அவருக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட பிறகு கைதி எண் 15528 ஒதுக்கப்பட்டுள்ளது.
தண்டனை விதிக்கப்பட்ட பிறகு, சீருடைகள் மட்டுமே அணிய வேண்டும். தினசரி எட்டு மணி நேரம் நிர்வாகம் ஒதுக்கும் வேலையை செய்ய வேண்டும். இதற்கு கூலியாக தினமும் 524 ரூபாய் வழங்கப்படும்.
இந்நிலையில், நே ற்று பிரஜ்வலுக்கு 35வது பிறந்தநாள். இரண்டு ஆண்டுகளுக்கு மு ன், பிரஜ்வல் தன் பிறந்தநாளை கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று வைரலானது.
அந்த வீடியோவில் பிரஜ்வல் கூறுகையில், 'என் பிறந்தநாளை முன்னிட்டு, என்னை யாரும் சந்திக்க வர வேண்டாம். ஆடம்பர கொண்டாட்டத்தில் யாரும் ஈடுபடக்கூடாது' என கூறியிருந்தார். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து, பிரஜ்வலை கேலி செய்து வருகின்றனர்.