/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பிரஜ்வல் போனில் 2,000 ஆபாச படங்கள் நீதிமன்றத்தில் கார் ஓட்டுநர் சாட்சியம்
/
பிரஜ்வல் போனில் 2,000 ஆபாச படங்கள் நீதிமன்றத்தில் கார் ஓட்டுநர் சாட்சியம்
பிரஜ்வல் போனில் 2,000 ஆபாச படங்கள் நீதிமன்றத்தில் கார் ஓட்டுநர் சாட்சியம்
பிரஜ்வல் போனில் 2,000 ஆபாச படங்கள் நீதிமன்றத்தில் கார் ஓட்டுநர் சாட்சியம்
ADDED : மே 27, 2025 11:37 PM

பெங்களூரு : ஹாசனின் முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் பலாத்கார வழக்கில், அவரது கார் ஓட்டுநர், நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
இது பிரஜ்வலுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
ஹாசனில், ம.ஜ.த., முன்னாள் எம்.பி.,யாக இருந்தவர் பிரஜ்வல் ரேவண்ணா. இவரை அரசியல் வாரிசாக்க, அவரது தாத்தாவும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா மிகவும் விரும்பினார். ஆனால், அவர் பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கினார்.
கடந்த 2024ல் நடந்த லோக்சபா தேர்தலில், பிரஜ்வல் ரேவண்ணா களமிறங்கியிருந்தார். ஓட்டுப்பதிவுக்கு சில நாட்கள் இருந்த நிலையில், அவரது ஆபாச பென் டிரைவ் வெளியாகி, தேசிய அளவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இவர் பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தன் வீட்டில் பணியாற்றும் பெண்ணையும் விட்டு வைக்கவில்லை என்பதை, வீடியோக்கள் உறுதிப்படுத்தன.
சிறையில் அடைப்பு
இந்த வழக்கில் கைதான பிரஜ்வல், தற்போது பெங்களூரின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைபட்டிருக்கிறார்.
வழக்கு தொடர்பாக, விசாரணை நடத்திய சி.ஐ.டி., போலீசார், மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் அவரது கார் ஓட்டுநர் கார்த்திக், நேரில் ஆஜராகி நீதிபதி முன்பாக சாட்சியம் அளித்தார்.
அவர் கூறியதாவது:
கடந்த 2009ல், நான் ரேவண்ணாவிடம் கார் ஓட்டுநராக இருந்தேன். அதன்பின் பவானி ரேவண்ணா, சூரஜ் ரேவண்ணாவுக்கு கார் ஓட்டுநராக இருந்தேன். 2018ல் இருந்து பிரஜ்வல் ரேவண்ணாவிடம் ஓட்டுநாக பணியாற்றினேன். ஒருநாள் தொகுதியில் பயணித்த போது, மொபைல் போனில் பிரஜ்வல் ஆபாச படம் பார்த்தார். நான் அவரை திரும்பி பார்த்த போது மறைத்து கொண்டார்.
மற்றொரு நாள், அவர்ஜெயநகரில் தன் தோழியை பார்க்க சென்றார். அப்போது தன் மொபைல் போனை, காரில் விட்டு சென்றார். எனக்கு அவரது மொபைல் பாஸ்வோர்டு தெரியும்.
பவானிக்கு தெரியும்
போனை ஆன் செய்து பார்த்த போது, 2,000 ஆபாச படங்கள், 40 முதல் 50 வீடியோக்கள் இருந்தன. அதை பவானி ரேவண்ணாவுக்கு காட்டுவதற்காக, அவற்றை என் போனுக்கு மாற்றி கொண்டேன்.
மகனுக்கு புத்திமதி கூறட்டும் என, நினைத்து பவானிக்கு ஆபாச போட்டோக்கள், வீடியோக்களை அனுப்பினேன்.
இந்த விஷயத்தை பகிரங்கப்படுத்த வேண்டாம் என, அவர் கேட்டுக்கொண்டார். அதன்பின் கோபத்தில், தன் மகன் பிரஜ்வலுடன் பேசுவதை, பவானி நிறுத்திவிட்டார்.
தன் தாயிடம் ஆபாச படங்கள், வீடியோக்களை அனுப்பியது யார் என, பிரஜ்வல் கேட்ட போது பவானி, என் பெயரை கூறினார்.
அதன்பின் பிரஜ்வல், எனக்கு போன் செய்து திட்டினார். இதனால் எங்களுக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டு, நான் வேலையை விட்டு விட்டேன்.
சொத்து தொடர்பாகவும், அவர் மீது வழக்கு தொடர்ந்தேன். அதற்கு தீர்வு காண்பதாக கூறி, மீண்டும் பணிக்கு வரும்படி என்னை அழைத்தார். ஆனால் வீடியோக்களை பகிரங்கப்படுத்த கூடாது என, நிபந்தனை விதித்தார்
ஆபாச வீடியோ வழக்கில், என்னை பிரதிவாதியாக்கியதால், வக்கீல் தேவராஜ் அர்சை தொடர்பு கொண்டேன். அவர் வீடியோ, போட்டோக்களை சாட்சிகளாக தரும்படி கேட்டதால், பென் டிரைவில் பதிவு செய்து கொடுத்திருந்தேன். லோக்சபா தேர்தலின் போது வெளியானது, இந்த பென்டிரைவ்தான்.
இவ்வாறு கூறியுள்ளார்.