/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பிரஜ்வல் மீதான பாலியல் வழக்கு தீர்ப்பு நாளை வெளியாகிறது
/
பிரஜ்வல் மீதான பாலியல் வழக்கு தீர்ப்பு நாளை வெளியாகிறது
பிரஜ்வல் மீதான பாலியல் வழக்கு தீர்ப்பு நாளை வெளியாகிறது
பிரஜ்வல் மீதான பாலியல் வழக்கு தீர்ப்பு நாளை வெளியாகிறது
ADDED : ஜூலை 31, 2025 06:17 AM

பெங்களூரு : பிரஜ்வல் மீதான பாலியல் பலாத்கார வழக்கில், நேற்று அறிவிக்கப்பட இருந்த தீர்ப்பு, நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஹாசன் மாவட்டம், ஹொளேநரசிபுராவில் தன் வீட்டில் பணியாற்றி வந்த, 47 வயது பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில், ஹாசன் ம.ஜ.த., முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, கடந்தாண்டு கைது செய்யப்பட்டா ர்.
ஓராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ள பிரஜ்வல், ஜாமின் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் பல்வேறு நீதிமன்றங்களில் தள்ளுபடி ஆகின.
விசாரணை முடிந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு ஜூலை 30ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி கஜானன் பட் அறிவித்திருந்தார்.
நேற்று காலை நீதிமன்றம் கூடியது. பெ ங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரஜ்வல் ரேவண்ணா, நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, நீதிபதி கஜானன் பட், 'நான் கேட்ட சில தொழில்நுட்ப தகவல்கள் கிடைக்க வில்லை' என்று கூறி, ஆக., 1க்கு, அதாவது நாளைக்கு தீர்ப்பை ஒத்திவைத்தார். இதையடுத்து, பிரஜ்வல் ரேவண்ணா, சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.