/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பிரதாப் போனில் ஆபாச வீடியோ காங்., லட்சுமண் அதிர்ச்சி தகவல்
/
பிரதாப் போனில் ஆபாச வீடியோ காங்., லட்சுமண் அதிர்ச்சி தகவல்
பிரதாப் போனில் ஆபாச வீடியோ காங்., லட்சுமண் அதிர்ச்சி தகவல்
பிரதாப் போனில் ஆபாச வீடியோ காங்., லட்சுமண் அதிர்ச்சி தகவல்
ADDED : ஆக 11, 2025 04:36 AM

குடகு: ''முன்னாள் பா.ஜ., - எம்.பி., பிரதாப் சிம்ஹாவின் மொபைல் போனில் உள்ள போட்டோக்கள், வீடியோக்களை பற்றி விசாரணை நடத்தினால், இவரும் பிரஜ்வல் ரேவண்ணாவை போன்று, தண்டனைக்கு ஆளாவார்,'' என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் லட்சுமண் தெரிவித்தார்.
குடகில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கடந்த 2023ல், பார்லிமென்ட் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக, பிரதாப் சிம்ஹாவின் மொபைல் போனை, போலீசார் பறிமுதல் செய்திருந்தனர். அதில் நிர்வாண போட்டோக்கள், வீடியோக்கள் காணப்பட்டன.
இதனால் தான், அவரது மொபைல் போனை, அமித் ஷா பறிமுதல் செய்ய வைத்தார். இக்காரணத்தால், பிரதாப் சிம்ஹாவுக்கு, லோக்சபா தேர்தலில் சீட் கொடுக்க கூடாது என, பா.ஜ., தலைவர்கள் முடிவு செய்தனர்.
முதல்வர் சித்தராமையா, காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் உட்பட, காங்கிரஸ் தலைவர்களை திட்டுவதே, பிரதாப் சிம்ஹாவின் வேலையாகும். டில்லியில் இவரை, 'புளூ பாய்' என, அழைக்கின்றனர்.
முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹாவின் மொபைல் போனில் உள்ள போட்டோக்கள், வீடியோக்களை பற்றி விசாரணை நடத்தினால், இவரும் பிரஜ்வல் ரேவண்ணாவை போன்று, தண்டனைக்கு ஆளாவார்.
இவருக்கு காங்கிரஸ் மற்றும் தலைவர்களை விமர்சிக்கும் அருகதை உள்ளதா. 2024 தேர்தலில் பிரதாப் சிம்ஹாவுக்கு சீட் கொடுத்திருந்தால், நான் மூன்று லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பேன். இனி அவர் எந்த தொகுதியில் நின்றாலும், அவரை எதிர்த்து நான் களமிறங்குவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

