தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மாரம்மா தேவி கோவிலில் வியாழன்தோறும் அருள்வாக்கு!

 மாரம்மா தேவி கோவிலில் வியாழன்தோறும் அருள்வாக்கு!

 மாரம்மா தேவி கோவிலில் வியாழன்தோறும் அருள்வாக்கு!


ADDED : செப் 22, 2026 01:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2026 01:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

மாண்டியாவில், அழகான மாரம்மா கோவில் அமைந்துள்ளது. இங்கு குடிகொண்டுள்ள மாரம்மா சக்தி வாய்ந்த அம்மனாகும்.

மாண்டியா மாவட்டம், பாண்டவபுரா தாலுகாவில் மாரம்மா கோவில் உள்ளது. இங்குள்ள அம்பாளை அஹல்யாதேவி, சண்டிசாமுண்டி, ஆதிசக்தி, கருணாசாகரி, அபயங்கரி, சாந்தசொரூபினி, காளிகாமோஹினி, துஷ்டசம்ஹாரினி, தோஷநிவாரணி என, பல பெயர்களில் அழைக்கின்றனர்.

கோவிலில் தினமும் மாலையில் விளக்கு பூஜை நடக்கும்.

மாரம்மா கோவிலில் அமாவாசை, பவுர்ணமி பூஜைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இப்பூஜைகளில் பங்கேற்றால் பில்லி, சூனியம் போன்ற தீவினைகள் அகலும். ஆரோக்கிய பிரச்னைகள் சரியாகும். மனநலப் பிரச்னைகள் குணமாகும். ஆரோக்கியம், ஆயுள் விருத்தியாகும் என்பது ஐதீகம்.

மைசூரு மன்னர் கூட மாரம்மா கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து சிறப்பு பூஜை செய்துள்ளாராம்.

சன்னிதியில் சர்வ அலங்காரத்துடன் வீற்றிருக்கும் அம்பாளின் விக்ரகம், மரத்தால் ஆனது. பல ஆண்டுகளுக்கு முன், 11 சகோதரர்கள் மீன் பிடிக்க ஆற்றுக்கு சென்றனர்.

அப்போது இவர்களுக்கு அம்பாளின் விக்ரகம் கிடைத்தது. இதை கொண்டு வந்து, பிரதிஷ்டை செய்த சகோதரர்கள், தினம் ஒருவர் வீதம் பூஜை செய்கின்றனர். செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுகிழமைகளில் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. வாரந்தோறும் வியாழக்கிழமையில், கோவிலில் அருள்வாக்கு கூறப்படுகிறது.

அந்த நாளில் பக்தர்கள் அம்பாளிடம் தங்கள் கஷ்டங்களை கூறி தீர்வு காணலாம். கோவிலுக்கு தினமும் பெருமளவில் பக்தர்கள் வருகின்றனர். அரசியல்வாதிகள், நடிகர், நடிகையரும் வந்து அம்பாளை தரிசனம் செய்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us