/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எல்லை மீறும் 'பிரீ வெட்டிங் போட்டோ சூட்' மைசூரில் போக்குவரத்து நெரிசலால் அவதி
/
எல்லை மீறும் 'பிரீ வெட்டிங் போட்டோ சூட்' மைசூரில் போக்குவரத்து நெரிசலால் அவதி
எல்லை மீறும் 'பிரீ வெட்டிங் போட்டோ சூட்' மைசூரில் போக்குவரத்து நெரிசலால் அவதி
எல்லை மீறும் 'பிரீ வெட்டிங் போட்டோ சூட்' மைசூரில் போக்குவரத்து நெரிசலால் அவதி
ADDED : மார் 24, 2025 05:05 AM

மைசூரு: திருமணத்துக்கு முன் எடுக்கும், 'பிரீ போட்டோ சூட்' கலாசாரம், போக்குவரத்தை பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு சென்றுள்ளதால், அதற்கு கடிவாளம் போட பல தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.
அரண்மனை நகரமான மைசூரில், அழகான இடங்கள் பல உள்ளன. இங்கு திருமணம் செய்து கொள்ளவிருக்கும் ஜோடி, தங்களுக்கு பிடித்தமான இடங்களில் 'பிரீ போட்டோ சூட்' எடுத்து கொள்கின்றனர்.
படப்பிடிப்பு தடை
கடந்த சில ஆண்டுகளுக்கு முன், அரண்மனைக்குள் தடை செய்யப்பட்ட பகுதியில் போட்டோ சூட் எடுக்கப்பட்டது. இது மாநில அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின், அரண்மனைக்குள் படப்பிடிப்பு தடை செய்யப்பட்டது. சில இடங்களில் அசம்பாவித சம்பவங்களும் நடந்துள்ளன. ஆனாலும் எதையும் பொருட்படுத்தாத இளம் ஜோடிகள், பிரீ வெட்டிங் போட்டோ சூட் நடத்துகின்றனர்.
மைசூரு நகரில் அரண்மனையின் வடக்கு நுழைவு வாயில் அருகில் சாமராஜா உடையார் சதுக்கத்தில், திருமணம் செய்து கொள்ள உள்ள ஜோடிகளை வைத்து போட்டோ சூட் நடத்தி உள்ளனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அங்கிருந்த போலீசார், காலை 8:00 மணிக்குள் போட்டோ சூட் நடத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாக இடத்தை காலி செய்ய வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர். ஆனால், அவர்கள் கேட்காததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சரமாரி திட்டு
இதை பார்த்த பொது மக்கள், திருமணம் செய்து கொள்ள விருக்கும் ஜோடியை திட்ட மனமில்லாமல், அவர்களுக்கு யோசனை கூறும் போட்டோ கிராபர்களை திட்டினர். அதன் பின்னரே, அவர்கள் அந்த இடத்தை விட்டு சென்றனர்.
மாவட்ட போட்டோ கிராபர்கள், வீடியோ கிராபர்கள் சங்க தலைவர் மகேஷ் கூறியதாவது:
போட்டோ சூட் நடத்தும் போது ஜாக்கிரதையாகவும், மற்றவர்களுக்கு தொந்தரவு ஏற்படாத வகையிலும் நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளோம். ஆனாலும், சிலர் கேட்பதில்லை.
சாலையின் நடுவில் போட்டோ சூட் நடத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று தெரிந்தே, செய்கின்றனர். இனி இதுபோன்று பொது மக்களுக்கு அதிருப்தி ஏற்படும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது என்று எங்களுக்குள் உள்ள 'வாட்ஸாப்'பில் தகவல் அனுப்புவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.