/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பஸ்சில் கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிரசவம்
/
பஸ்சில் கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிரசவம்
ADDED : ஏப் 22, 2025 05:13 AM

ராய்ச்சூர்: ராய்ச்சூர் மாவட்டம், லிங்கசகூர் தாலுகாவின் ஹொம்பளகல் கிராமத்தில் வசிப்பவர் ஷாம்பவி, 24. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர், கணவருடன் பக்கத்து கிராமத்துக்கு சென்றார். பின் நேற்று காலை கல்யாண கர்நாடகா போக்குவரத்துக்கழக பஸ்சில், கிராமத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
முதகல் கிராமத்தின் அருகில் வந்தபோது, ஷாம்பவிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. நேரம் செல்ல செல்ல வலி அதிகரித்தது. அதே பஸ்சில் பயணம் செய்த ஆஷா ஊழியர் மேரி, உதவிக்கு வந்தார். சாலை ஓரம் பஸ்சை நிறுத்தி அனைவரும் கீழே இறங்கினர். அதன்பின் ஷாம்பவிக்கு, மேரி பிரசவம் பார்த்தார். பெண் குழந்தை பிறந்தது.
அதன் பின் தாயையும், சேயையும் அதே பஸ்சில் சென்று, முதகல் ஆரம்ப சுகாதாரத்துறை மையத்தில் சேர்த்தனர். இருவரும் ஆரோக்கியமாக உள்ளனர்.