/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கள்ளக்காதல் விவகாரத்தில் கர்ப்பிணி, கணவர் கொலை
/
கள்ளக்காதல் விவகாரத்தில் கர்ப்பிணி, கணவர் கொலை
ADDED : மே 01, 2025 05:39 AM

பீதர்: கள்ளக்காதல் விவகாரத்தில், கணவர், கர்ப்பிணி மனைவி கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.
பீதர், பசவகல்யாண் தாலுகா ஜாபர்வாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜு, 28. இவரது மனைவி சாரதா, 24. தம்பதிக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. மீண்டும் கர்ப்பம் அடைந்த சாரதா, தற்போது மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தார்.
ராஜுவுக்கும், அவரது கிராமத்தை சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுக்கும் இடையில் கள்ளக்காதல் இருந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்தனர். இதுபற்றி அறிந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர், ராஜுவிடம் தகராறு செய்தனர்.
இதையடுத்து, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, ராஜு, தனது மனைவி, குழந்தையுடன் மும்பைக்கு சென்று அங்கு தங்கி இருந்து வேலை செய்தார். இரண்டு நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்து இருந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு ராஜுவின் வீட்டிற்கு, கள்ளக்காதலியின் சகோதரர்கள் தத்தாத்ரேயா, துக்காராம் ஆகியோர் சென்றனர்.
தங்கையுடன் கள்ளக்காதல் வைத்து இருந்தது பற்றி கேட்டு தகராறு செய்தனர். தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜுவின் கழுத்தை அறுத்தனர். தடுக்க முயன்ற சாரதாவின் கழுத்தையும் அறுத்துவிட்டு தப்பினர். ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து தம்பதி உயிரிழந்தனர்.
இரட்டை கொலை, 2 வயது குழந்தையின் கண்முன்பே நடந்து உள்ளது. இரவில் நீண்ட நேரமாக குழந்தை அழுது கொண்டே இருந்ததால் அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்த போது, தம்பதி கொலை செய்யப்பட்டது தெரிந்தது. மந்தாலா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
நேற்று காலை தத்தாத்ரேயா, துக்காராம் போலீசில் சரண் அடைந்தனர். அவர்களை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.