தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கனககிரி உற்சவத்திற்கு ஏற்பாடுகள் தீவிரம்

 கனககிரி உற்சவத்திற்கு ஏற்பாடுகள் தீவிரம்

 கனககிரி உற்சவத்திற்கு ஏற்பாடுகள் தீவிரம்


ADDED : மே 13, 2026 11:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 13, 2026 11:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கனககிரி: கொப்பல் மாவட்ட நிர்வாகம் மற்றும் கன்னடம் மற்றும் கலாசார துறை இணைந்து நடத்தும் கனககிரி உற்சவம் - 2026, வரும் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் விமரிசையாக நடக்க உள்ளது.

இந்த உற்சவத்தை சனிக்கிழமை மாலை 6:30 மணிக்கு முதல்வர் சித்தராமையா துவக்கி வைக்கிறார். துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மற்றும் பல அமைச்சர்கள், பார்லிமென்ட் உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

மைசூரு தசரா விழாவைப் போலவே, இரண்டு நாட்களும், கண்கவர் 'ட்ரோன்' ஷோக்கள் நடத்தப்பட உள்ளன. பொதுமக்களுக்காக காலை முதல் மாலை வரை ஹெலிகாப்டர் பயணங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கனககிரி நகரம் முழுவதும் தசரா பாணியில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. முதல் நாளன்று நாட்டுப்புறக் கலைக் குழுவினர் பங்கேற்கும் பிரமாண்ட ஊர்வலம் எதுரு ஹனுமப்பா கோவிலில் இருந்து கனகாசலபதி கோவில் வரை நடைபெறும்.

நடிகர் ஸ்ரீமுரளி, பாடகர் சஞ்சித் ஹெக்டே, சவாரி பேண்ட் மற்றும் டி.கே.டி., நடனக் குழுவினரின் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நிறைவு விழாவில் நடிகர் டாலி தனஞ்சயா, நடிகை சப்தமி கவுடா, இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா, பாடகிகள் சாத்வினி கொப்பா, ஐஸ்வர்யா ரங்கராஜ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

உற்சவத்தை முன்னிட்டு இன்றும், நாளையும் வாலிபால், கபடி, மல்யுத்த போட்டிகள் நடத்தப்படுகின்றன. கனககிரி பாரம்பரியம் குறித்த கருத்தரங்குகள், கவியரங்கங்கள், அரசுத் துறைகளின் கண்காட்சிகளும் இடம்பெறுகின்றன.

இந்த விழாவிற்காக, 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட கலெக்டர் சுரேஷ் பி.இட்னால் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us