தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சுமைகளை சமாளிக்க தயாராகுங்கள் பீதியை கிளப்பும் அமைச்சர் குமாரசாமி

 சுமைகளை சமாளிக்க தயாராகுங்கள் பீதியை கிளப்பும் அமைச்சர் குமாரசாமி

 சுமைகளை சமாளிக்க தயாராகுங்கள் பீதியை கிளப்பும் அமைச்சர் குமாரசாமி


ADDED : மார் 08, 2026 05:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2026 05:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாண்டியா: ''சர்வதேச அளவிலான நிலவரங்களால், காஸ் விலை உயர்வு உட்பட பல சுமைகளை சமாளிக்க நாம் தயாராக வேண்டும்,'' என, மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சர் குமாரசாமி பீதியை கிளப்பினார்.

மாண்டியாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:

கர்நாடக அரசின் பட்ஜெட்டில் புள்ளி - விபரங்களை மூடி மறைத்துள்ளனர். ஜி.டி.பி., முன்னேற்றம், 25 சதவீதத்தை தாண்டியுள்ளது. இதன் விளைவுகள் வரும் நாட்களில் தென்படும். வாயை திறந்தால் மத்திய அரசை குறை கூறுகின்றனர்.

அனைத்து துறைகளிலும் கர்நாடக காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்துள்ளது. எத்தினஹொளே திட்டத்தின் முதற்கட்டம் முடிந்துள்ளது. இரண்டாம் கட்டத்தை துவக்குவதாக கூறியுள்ளனர்.

எப்போது?

கொரட்டகரே அருகில், 5.5 டி.எம்.சி., தண்ணீர் சேகரிப்பு திறன் கொண்ட அணை கட்ட திட்டம் வகுக்கப்பட்டது. இப்போது அதை, 1.2 டி.எம்.சி.,யாக குறைத்துள்ளனர்.

சுற்றுச்சூழல் துறை அனுமதி கிடைக்கவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே, திட்டத்தை நிறைவு செய்வதாக கூறி வருகின்றனர். இதே சூழ்நிலை இருந்தால், கோலார், சிக்கபல்லாபூர் மாவட்டங்களுக்கு தண்ணீர் கொண்டு வருவது எப்போது?

அதிகமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். நீர்ப்பாசன திட்டங்களுக்கு தேவையான பணத்தை ஒதுக்கவில்லை. மூன்று மணி நேரம் மகிழ்ச்சியாக, பட்ஜெட் படிக்கவில்லை; கஷ்டப்பட்டு படித்தார்.

முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்துள்ள சாதனை பட்ஜெட்டின் விளைவாக, வரும் நாட்களில் மக்களின் தலையில் சுமை ஏற்படும்.

மாண்டியாவில், 'கேலோ இந்தியா' திட்டத்தின் கீழ், ஒன்றரை ஏக்கரில், 14 கோடி ரூபாய் செலவில், அதிநவீன, தரமான விளையாட்டு அரங்கம் கட்டப்படும். மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அடிக்கல் நாட்டுவார்.

இங்கு விளையாட்டு பயிற்சி, ஹாஸ்டல் வசதி செய்யப்படும். இதற்கு ஐந்து ஏக்கர் நிலம் தேவைப்படும். ஆனால் ஒன்றரை ஏக்கர் மட்டுமே அளித்துள்ளனர்.

அத்துடன், 1,000 கோடி ரூபாய் செலவில், மாண்டியா மாவட்டத்தில் தொழிற் சாலை அமைக்கப்படும். கே.ஐ.ஏ.டி.பி., சார்பில் அடிப்படை வசதிகளுடன் கூடிய நிலம் வழங்க வேண்டும். அதன்பின் இந்த நிலத்தை எங்கள் துறை அதிகாரிகள் ஆய்வு செய்வர்.

டூ--வீலர் தயாரிப்பு

எப்.கே.சி.சி.ஐ., நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இவர்கள் இருச்சக்கர வாகனம் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க ஆர்வம் காட்டுகின்றனர். மாண்டியா மாவட்ட மக்களின் நம்பிக்கைக்கு பாதிப்பு வராமல், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.

துணை முதல்வர் சிவகுமார், முதல்வராவதை நான் எதற்காக தடுக்க வேண்டும். முதல்வர் பதவியை சிவகுமாருக்கு விட்டுத்தரும்படி, ஒரு வாரமாக சித்தராமையாவிடம் கூறி வருகிறேன்.

அவரிடம் சிவகுமார் பேசட்டும். சர்வதேச அளவிலான நிலவரங்களால், காஸ் விலை உயர்வு உட்பட பல சுமைகளை சமாளிக்க, நாம் தயாராக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us