UPDATED : நவ 19, 2026 12:00 AM
ADDED : நவ 18, 2026 08:02 PM
பெங்களூரு: ஐந்தாவது ஆண்டு தமிழ் புத்தகத் திருவிழாவுக்கான விளக்க குறிப்பேடு, ஆர்.பி.ஏ.என்.எம்.எஸ்., கல்லுாரி இயக்குநர் சஹானிதாஸிடம் நேற்று வழங்கப்பட்டது.
கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின், 5வது ஆண்டு தமிழ் புத்தகத் திருவிழா, பெங்களூரு ஹலசூரு ஏரிக்கரையில் உள்ள, ஆர்.பி.ஏ.எம்.எம்.எஸ்., – பி.யு., கல்லுாரியில், டிசம்பர் 18 முதல் 27 வரை பத்து நாட்கள் நடக்க உள்ளது.
ஆண்டுதோறும், புத்தக திருவிழாவுக்கான விளக்க குறிப்பேடுகளை, முக்கிய பிரமுகர்களுக்கு வழஙகுவது வழக்கம். அவ்வகையில், ஆர்.பி.ஏ.என்.எம்.எஸ்., கல்லுாரி வளாகத்தில், கல்லுாரி இயக்குநர் சஹானிதாஸிடம் புத்தக திருவிழா விளக்க குறிப்பேட்டை, கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்க தலைவர் முத்துமணி நேற்று வழங்கினார்.
புத்தக திருவிழா சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக, கல்லுாரி இயக்குநர் உறுதியளித்தார். அப்போது, கல்லுாரி தமிழ் துறை பேராசிரியர் சிவபிரியா மற்றும் சங்க உறுப்பினர்கள்உடனிருந்தனர்.
