/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிகரெட், ஹுக்கா பார் தடை மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்
/
சிகரெட், ஹுக்கா பார் தடை மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்
சிகரெட், ஹுக்கா பார் தடை மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்
சிகரெட், ஹுக்கா பார் தடை மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்
ADDED : மே 30, 2025 11:37 PM
பெங்களூரு: சிகரெட் மற்றும் ஹுக்கா பார் தடை செய்யும் மசோதாவுக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளார்.
மாநிலத்தில் 21 வயதுக்கும் குறைவானவர்களுக்கு புகையிலைப் பொருட்களை விற்போர் மீது, நடவடிக்கை எடுக்க கர்நாடக அரசு முடிவு செய்தது.
இதற்காக சிகரெட்டுகள் மற்றும் மற்ற புகையிலை பொருட்கள் மற்றும் விற்பனை தடை திருத்த மசோதா - 2024 கொண்டு வந்தது.
இம்மசோதா 2024 பிப்ரவரியில், சட்டசபை, மேல்சபையில் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசு 2003ல் கொண்டு வந்த சட்டம், அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்துவதாக இருந்தது.
இந்த சட்டத்தில் கர்நாடக அரசு திருத்தம் கொண்டு வந்தது. எனவே இந்த மசோதா, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி, நேற்று ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார். இதை அரசிதழில் கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது.
தற்போது இத்தகைய பொருட்களை வாங்குவோரில், 18 வயதுள்ளவர்களே அதிகம். தற்போது புதிய மசோதா அமலுக்கு வந்துள்ளதால், 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சிகரெட், புகையிலை விற்பது குற்றமாகும்.
திருத்த சட்டத்தின் படி, ஹுக்கா பார் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகள், பப், ரெஸ்டாரென்ட் உட்பட, எந்த இடத்திலும், ஹுக்காபார் நடத்த அனுமதி இல்லை.
விதிகளை மீறினால், விதிக்கப்படும் அபராதம் 200 ரூபாயில் இருந்து, 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஹுக்காபார் நடத்தி, விதிகளை மீறுவோருக்கு ஓராண்டு முதல் மூன்றாண்டு சிறை; 50,000 முதல் 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் சட்டதிருத்தத்தில் இடம் உள்ளது.