/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஜனாதிபதி திரவுபதி முர்மு 16, 17ல் மைசூரு வருகை
/
ஜனாதிபதி திரவுபதி முர்மு 16, 17ல் மைசூரு வருகை
ADDED : டிச 09, 2025 06:37 AM

மைசூரு: மாண்டியாவில் ஸ்ரீ சிவராத்திரீஸ்வர சுவாமிகள் 1066வது ஜெயந்தி நிகழ்ச்சியில் பங்கேற்க, ஜனாதிபதி திரவுபதி முர்மு, வரும் 16, 17 ம் தேதி மைசூரு வருகை தருகிறார்.
மாண்டியா மாவட்டம் மலவள்ளியில் ஸ்ரீ சிவராத்திரீஸ்வர சிவயோகி சுவாமிகள் 1066வது ஜெந்தி விழா நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு, வரும் 16ம் தேதி தனி விமானம் மூலம் மைசூரு மண்டகள்ளி விமான நிலையம் வருகை தருகிறார். மைசூரில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்குகிறார்.
மறுநாள் மைசூரு விமான நிலையத்தில் இருந்து ராணுவ விமானத்தில் மலவள்ளிக்கு செல்கிறார். அங்கு ஜெயந்தி விழாவில் பங்கேற்கிறார். பின் அங்கிருந்து மைசூரு விமான நிலையத்துக்கு வரும் அவர், புதுடில்லிக்கு சிறப்பு விமானத்தில் புறப்படுகிறார்.
கடந்த மாதம் மைசூரு வந்த அவர், சாமுண்டி மலையில் சாமுண்டீஸ்வரி தேவியை தரிசிக்க முடியாமல் சென்றார். இம்முறை 16ம் தேதி வரும் அவர், அன்று மாலை சாமுண்டி மலைக்கு செல்ல உள்ளார். இது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளுடன், மாவட்ட கலெக்டர் லட்சுமிகாந்த் ரெட்டி நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
ஜனாதிபதி வரும் விமான நிலையம், தங்கும் ஹோட்டல், அவர் செல்லும் மைசூரு - நஞ்சன்கூடு சாலையிலும், சாமுண்டி மலையிலும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை எடுக்க உத்தரவிட்டார்.

