தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு வராமல் தடுங்க! அதிகாரிகளுக்கு தங்கவயல் எம்.எல்.ஏ., அறிவுறுத்தல்

 கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு வராமல் தடுங்க! அதிகாரிகளுக்கு தங்கவயல் எம்.எல்.ஏ., அறிவுறுத்தல்

 கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு வராமல் தடுங்க! அதிகாரிகளுக்கு தங்கவயல் எம்.எல்.ஏ., அறிவுறுத்தல்


ADDED : மார் 04, 2026 05:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2026 05:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தங்கவயல்: ''கோடை காலத்தில் கிராமப்புறங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா அறிவுறுத்தினார்.

கிராம பஞ்சாயத்து நிர்வாக அதிகாரிகள் கூட்டம், தாலுகா பஞ்சாயத்து அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதில், கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் கூறிய கருத்துக்களின் சாராம்சம்:

தற்போதைய நிலவரப்படி எந்த கிராமத்திலும் குடிநீர் பிரச்னை இல்லை. வரும் நாட்களில், சில கிராமங்களில் பிரச்னை உருவாக வாய்ப்பு உள்ளது. ஜே.ஜே.எம்., என்ற 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்தின் கீழ் தோண்டப்பட்ட போர்வெல்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டால் கிராமங்களின் நிலை மேலும் மேம்படும். கடுமையான குடிநீர் பிரச்னை உருவாகக்கூடிய கிராமங்களில் ஏற்கனவே, தனியார் போர்வெல்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. அவசர காலங்களில் அவற்றின் இணைப்பை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

பஞ்சாயத்து அதிகாரிகள் கூறிய தகவல்களை கேட்ட பின், எம்.எல்.ஏ., ரூபகலா பேசியதாவது:

கோடை காலத்தில் கிராமங்களில் குடிநீர் பிரச்னை ஏற்படாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்தவித அலட்சியமும் காட்டக்கூடாது. குடிநீர் பிரச்னையை தீர்க்க இயன்றளவு அறிவியல் முறைகளையும், எளிய வழிகளையும் பயன்படுத்த வேண்டும். அதிகாரிகள், அனைத்து கிராமங்களுக்கும் நேரில் சென்று பார்வையிட வேண்டும். கிராமங்களில் சுத்தம், சுகாதாரத்தை பேணிக்காக்க வேண்டும். பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாதபடி கவனம் செலுத்துவது முக்கியம்.

ஜே.ஜே.எம்., திட் டத்தின் கீழ் தோண்டப்பட்ட போர்வெல்களுக்கு மின்சாரம் வழங்குவதற்காக பெஸ்காம் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்படும். குடிநீர் விஷயத்தில் அரசியல் செய்யாமல் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தங்கவயல் தாலுகா பஞ்சாயத்து செயல் அதிகாரி வெங்கடேஷ் , உதவி செயற்பாட்டு பொறியாளர் ஆனந்த், கிராமப்புற குடிநீர் மற்றும் சுகாதார துறை மற்றும் பல்வேறு பஞ்சாயத்துகளின் நிர்வாக அதிகாரிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us