/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம்
/
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம்
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம்
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம்
ADDED : ஜூன் 20, 2025 11:09 PM

பெங்களூரு:''நரேந்திர மோடி பிரதமரானபோது, 60 கோடி ஏழை மக்களுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று கூறிய வாக்குறுதியை நிறைவேற்றியதை பெருமையுடன் கூற முடியும்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
பெங்களூரு நகரூரில் உள்ள பி.ஜி.எஸ்., - எம்.சி.எச்., வளாகத்தில் நேற்று, ஆதிசுஞ்சனகிரி பல்கலைகழகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா துவக்கி வைத்தார்.
பின், அவர் பேசியதாவது:
வறுமையை எதிர்கொள்வோர் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்னை நோயும், சிகிச்சைக்கான செலவுமாகும்.
நம் பிரதமர் மோடி, பல ஆண்டுகளுக்கு முன்பு, குஜராத்தில் ஏழைகளுக்கு சிகிச்சை அளிக்க, அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
மோடி பிரதமரானபோது, 60 கோடி ஏழை மக்களுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று கூறிய வாக்குறுதியை நிறைவேற்றியதை, என்னால் பெருமையுடன் கூற முடியும்.
மோடி அரசு, 'பிட் இந்தியா இயக்கம்', யோகா தினம், மிஷன் இந்திராதனுஷ், போஷனா அபியான், ஆயுஷ்மான் பாரத், பாரதிய ஜன அவுசதி உள்ளிட்ட திட்டங்கள் மூலம், 12 கோடி வீடுகளில், கழிப்பறைகள் கட்டுதல் உட்பட முழுமையான கண்ணோட்டத்தில் சுகாதார தேவைகளை நிவர்த்தி செய்துள்ளது.
ஒரு குழந்தை கருவில் இருக்கும் காலம் முதல், முதிர் வயது வரை, அவரது வாழ்நாள் முழுதும் ஆதரவளிக்க, ஒரு முழுமையான சுகாதார அணுகுமுறை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கட்டத்திலும் நோயை தடுப்பதும், யாராவது நோயால் பாதித்தால், நிதி நெருக்கடியை எதிர்கொள்ளாமல், மலிவு விலையில் சிகிச்சை பெறுவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.
நாட்டில் மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 2014ல் நாட்டில் ஏழு எய்ம்ஸ் மருத்துவமனைகள் இருந்தன. இன்று, 23 எய்ம்ஸ்கள் உள்ளன.
மருத்துவ கல்லுாரிகளின் எண்ணிக்கை, 387ல் இருந்து 780ஆக உயர்ந்து உள்ளன. 2014ல் 51,000 எம்.பி.பி.எஸ்., இடங்கள் இருந்தன. இன்று 1.18 லட்சமாக அதிகரித்துள்ளன.
முதுகலை இடங்களின் எண்ணிக்கை 31,000லிருந்து 74,000ஆக அதிகரித்துள்ளது. எனவே, ஒவ்வொரு ஆண்டும் நாட்டில், 1.18 லட்சம் எம்.பி.பி.எஸ்., மருத்துவர்கள் வெளி வருகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், ஆதிசுஞ்சனகிரி மடாதிபதி நிர்மலானந்தநாத சுவாமிகள், மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி, மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

