தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மாணவர்களை லாரியில் சுற்றுலா அழைத்து சென்ற தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

 மாணவர்களை லாரியில் சுற்றுலா அழைத்து சென்ற தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

 மாணவர்களை லாரியில் சுற்றுலா அழைத்து சென்ற தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்


ADDED : பிப் 13, 2026 05:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2026 05:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மங்களூரு: பள்ளி மாணவர்களை லாரியில் ஏற்றி, சுற்றுலா அழைத்து சென்ற, தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

தட்சிண கன்னடா மாவட்டம், பெல்தங்கடி தாலுகாவின், பளெஞ்சா கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சில நாட்களுக்கு முன், நுாற்றாண்டு கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்து செல்ல, தலைமை ஆசிரியர் கிரண் ஏற்பாடு செய்தார்.

விவசாயம் குறித்து மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், பெல்தங்கடியின் நால்கூரு அருகேயுள்ள விவசாய பண்ணைக்கு, பிப்ரவரி, 10ம் தேதி மாணவர்களை அழைத்து சென்றார். மாணவர்களை பஸ்சிலோ அல்லது வேனிலோ அழைத்து சென்றிருக்க வேண்டும். ஆனால், தலைமை ஆசிரியர் கிரண், மாணவர்களை லாரியில் அழைத்துச் சென்றார்.

அதில், அமரவும் இடம் இல்லாமல், நின்றபடியே மாணவர்கள் லாரியில் செல்வதை கண்ட சிலர், இதை தங்களின் மொபைல் போனில் பதிவு செய்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இதைக்கண்ட மாணவர்களின் பெற்றோரும், பொது மக்களும் தலைமை ஆசிரியரை கடுமையாக கண்டித்தனர். மாணவர்களை ஆடுகள், மாடுகள், சரக்குகளை போன்று லாரியில் ஏற்றி செல்வது சரியா என்றும், காட்டமாக கேள்வி எழுப்பினர்.

கூலியாட்களையே லாரிகளில் அழைத்து செல்லக்கூடாது என, சட்டம் உள்ளது. அப்படிப்பட்ட நிலையில், மாணவர்களை இப்படி அழைத்து சென்றிருப்பது சரியல்ல. அவர்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டிருந்தால், யார் பொறுப்பு. எனவே, தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும்படி பலரும் வலியுறுத்தினர்.

இதை தீவிரமாக கருதிய கல்வித்துறை, தலைமை ஆசிரியர் கிரணை சஸ்பெண்ட் செய்து, நேற்று உத்தரவிட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us