/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை: ரூபகலா
/
அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை: ரூபகலா
ADDED : செப் 03, 2025 05:59 AM

தங்கவயல் : தங்கவயல் தொகுதிக்கு உட்பட்ட பேத்தமங்களாவில் சாலைகள் மேம்பாட்டுக்கு பூமி பூஜையும், பாரண்டஹள்ளி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட இரண்டு கிராமங்களில் சுத்திகரிப்பு செய்த குடிநீர் விநியோகத்தின் தொடக்க விழாவும் நேற்று நடந்தது.
பேத்தமங்களாவில் சிறுபான்மையினர் நிறைந்த பகுதியில் 30 லட்சம் ரூபாய் செலவில் சாலைகள் மேம்படுத்த முன்னுரிமை வழங்க தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா தலைமையில் பூமி பூஜை நடந்தது. பேத்தமங்களா கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள், வட்டார பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர்.
தங்கவயலின் பாரண்ட ஹள்ளி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட அல்லிகுண்டே கதிரேன ஹள்ளி, குருடாத்ர ஹள்ளி ஆகிய இரண்டு கிராமங்களிலும் தலா 12 லட்சம் ரூபாய் செலவில் குடிநீர் சுத்திகரிக்கும் பிளான்ட் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றையும் நேற்று எம்.எல்.ஏ., ரூபகலா திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், “தங்கவயல் தொகுதியில் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அனைத்து கிராமங்களுக்கும் சுத்தமான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வேன். அதேபோல சாலை வசதிகளும் செய்து தரப்படும்,” என்றார்.