/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விபத்து வழக்கில் தனியார் ஊழியருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து
/
விபத்து வழக்கில் தனியார் ஊழியருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து
விபத்து வழக்கில் தனியார் ஊழியருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து
விபத்து வழக்கில் தனியார் ஊழியருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து
ADDED : ஜூன் 07, 2025 11:06 PM
பெங்களூரு: விபத்தில் வாலிபர் இறந்த வழக்கில், தனியார் நிறுவன ஊழியருக்கு விதிக்கப்பட்ட, இரண்டு மாத சிறை தண்டனையை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
மைசூரை சேர்ந்தவர் திலீப்குமார், 27. இவர் தன் நண்பரான மனோகருடன், 2018ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி மைசூரில் இருந்து பெங்களூருக்கு பைக்கில் சென்றார்.
பெங்களூரின் நைஸ் சாலையில் கெங்கேரி அருகே உல்லால் பகுதியில் வந்தபோது, பைக்கை சாலையோரம் நிறுத்திவிட்டு இருவரும் இயற்கை உபாதை கழித்தனர். பின், பைக்கை 'ஸ்டார்ட்' செய்து புறப்பட்டனர்.
அப்போது பின்னால் வந்த கார், பைக் மீது மோதியது. பைக்கில் இருந்து துாக்கி வீசப்பட்டு திலீப்குமார் இறந்தார். மனோகர் அளித்த புகாரில், காரை ஓட்டி வந்த துமகூரின் தனியார் நிறுவன ஊழியர் ஹரிஷ் கைது செய்யப்பட்டார். பின், அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கு குறித்து பெங்களூரின் விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஹரிஷுக்கு 2 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் ஹரிஷ் மேல்முறையீடு செய்தார். மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் வாதிடுகையில், இறந்தவர் திடீரென பைக்கை வலதுபக்கம் திருப்பியதால் விபத்து நடந்தது என்றதும், அவர் மது அருந்தி இருந்தார் என பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.
அரசு தரப்பு வக்கீல், 'மனுதாரர், காரை வேகமாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியதாக கூறினார்.
கடந்த 7 ஆண்டுகளாக நடந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நேற்று முன்தினம் நீதிபதி ராஜேஷ் ராய் தீர்ப்பு கூறினார். மனுதாரர் வேகமாக காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தினார் என்ற ஆதாரங்களை அரசு தரப்பு சமர்ப்பிக்கவில்லை.
இறந்தவர் பைக்கை திடீரென வலது பக்கம் திருப்புவார் என, மனுதாரர் எதிர்பார்த்து இருக்க மாட்டார் என்று கூறிய நீதிபதி, மனுதாரருக்கு விதிக்கப்பட்ட இரண்டு மாத சிறை தண்டனையை ரத்து செய்தார்.