/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பரப்பன அக்ரஹாரா சிறையில் ஊழியர்களுக்கு கைதிகள் 'பிளாக்மெயில்'
/
பரப்பன அக்ரஹாரா சிறையில் ஊழியர்களுக்கு கைதிகள் 'பிளாக்மெயில்'
பரப்பன அக்ரஹாரா சிறையில் ஊழியர்களுக்கு கைதிகள் 'பிளாக்மெயில்'
பரப்பன அக்ரஹாரா சிறையில் ஊழியர்களுக்கு கைதிகள் 'பிளாக்மெயில்'
ADDED : நவ 15, 2025 11:05 PM
பெங்களூரு: 'தங்களுக்கும் சொகுசு வசதி ஏற்படுத்தி தராவிட்டால், சிறையில் எடுத்த வீடியோக்களை வெளியிடுவோம்' என, பரப்பன அக்ரஹாரா சிறை ஊழியர்களை, கைதிகள் 'பிளாக்மெயில்' செய்தது தெரிய வந்துள்ளது.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும், பயங்கரவாதி சகீல் மன்னா உள்ளிட்ட கைதிகள், மொபைல் பயன்படுத்தும் வீடியோ, கடந்த வாரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து பரப்பன அக்ரஹாரா உட்பட மாநிலம் முழுதும் உள்ள சிறைகளில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் பற்றி, ஒரு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் உத்தரவிட்டார்.
சிறைகளை ஆய்வு செய்ய சட்டம் - ஒழுங்கு கூடுதல் ஹிதேந்திரா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று, கைதிகள் அறையை ஆய்வு செய்ததுடன், கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழும் வீடியோ வெளியானது பற்றியும் விசாரித்து தகவல் பெற்றனர். இவர்கள் விசாரணை நடத்தியபோது, சிறை ஊழியர்களை, கைதிகள் மிரட்டியது தெரிய வந்துள்ளது.
அதாவது பணத்திற்கு ஆசைப்படும் சில சிறை ஊழியர்கள், கைதிகளுக்கு மொபைல், கஞ்சா, சிகரெட் வாங்கிக் கொடுத்து உள்ளனர். சிறை ஊழியர்கள் மூலம் மொபைல் பெற்ற கைதிகள், சக கைதிகளுக்கு, சிறையில் கிடைக்கும் ராஜ உபசாரத்தை புகைப்படம், வீடியோ எடுத்துள்ளனர்.
அதை சிறை ஊழியர்களிடம் காண்பித்து, 'எங்களுக்கும் சொகுசு வசதி ஏற்படுத்திக் கொடுங்கள்; இல்லாவிட்டால் இந்த வீடியோக்களை வெளியிட்டு விடுவோம்' என மிரட்டி உள்ளனர். சிறையில் உள்ள பவன், விஜி என்ற கைதிகள் மூலம், வீடியோக்கள் வெளியாகி இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பவன், பிரபல ரவுடி வில்சன் கார்டன் நாகாவின் கூட்டாளி ஆவார்.
கொலை வழக்கில் சிறையில் இருக்கும் தர்ஷனுக்கு, நாகா சிறப்பு வசதியை ஏற்படுத்திக் கொடுத்தார். இந்த வீடியோ வெளியான நிலையில், பல்லாரி சிறைக்கு நாகா மாற்றப்பட்டார். இதனால் சிறை ஊழியர்கள் மீதான கோபத்தில், பவன் வீடியோவை வெளியிட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வீடியோவை வெளியிட்டதாக சந்தேகத்தின்பேரில், நடிகர் தர்ஷனின் ஆதரவாளரான, நடிகர் தன்வீர் கவுடாவிடம், சி.சி.பி., போலீசார் நேற்று இரண்டாவது முறையாக விசாரித்து உள்ளனர்.

