சிறையில் கைதிகள் சொகுசு புதிய 'வீடியோ'வில் அம்பலம்
சிறையில் கைதிகள் சொகுசு புதிய 'வீடியோ'வில் அம்பலம்
ADDED : ஜூன் 17, 2026 01:59 AM

தார்வாட்: சிறையில் கைதிகள் மொபைல் போன் உபயோகித்து கொண்டு, பிரியாணி செய்து சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின், தார்வாட் மத்திய சிறையில் கைதிகள் மொபைல் போன் உபயோகிப்பது, பிரியாணி சமைத்து சாப்பிடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வெளியாகியுள்ள அந்த வீடியோவில், கைதிகள் படுத்துக்கொண்டு மொபைல் போன்கள் உபயோகிக்கின்றனர். மூன்று ஸ்மார்ட் போன்கள் 'சார்ஜிங்' செய்யப்படுவதை காண முடிகிறது.
கைதிகள் பிரியாணி செய்து, கூட்டாக அமர்ந்து கொண்டு சாப்பிடுவதும் வீடியோவில் பதிவாகி உள்ளது.
'மாநிலத்தில் உள்ள அனைத்து சிறைகளிலுமே கைதிகள் சொகுசாக வாழ்கின்றனர்.
'ஒவ்வொரு சிறையும் சொகுசு விடுதிகள் போல இருக்கின்றன' என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
