ADDED : செப் 19, 2026 02:23 AM
பெங்களூரு: பெங்களூரின் பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகளின் மறுவாழ்வு மற்றும் திறன் மேம்பாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள, 'நவ சங்கல்பா' பேக்கரி எனும் கடையை சிறைத்துறை டி.ஜி.பி., அலோக்குமார் நேற்று திறந்து வைத்தார்.
பெங்களூரின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் கைதிகளின் மன மாறுதலுக்காகவும், அவர்கள் விடுதலையாகி வெளியே சென்ற பின், சுய தொழில் துவங்க வழி வகுக்கும் நோக்கிலும் பலவிதமான கைத்தொழில்களில் பயிற்சி அளிக்கப் படுகிறது.
கைதிகள் தயாரிக்கும் பேக்கரி உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய, சிறையில், நவ சங்கல்பா பேக்கரி அமைக்கப்பட்டது. இதை சிறைத்துறை டி.ஜி.பி., அலோக்குமார், நேற்று முன் தினம் திறந்து வைத்தார்.
சிறைக்கு வந்த புதிய கைதிகளுக்கு, பேக்கரி உற்பத்தி பொருட்கள் தயாரிக்க பயிற்சி துவக்கப்பட்டது. பயிற்சியை முடித்தவர்களுக்கு, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.
சிறை அதிகாரிகள் கூறுகையில், 'விடுதலையாகி வெளியே சென்ற பிறகு, யாரையும் கைதிகள் சார்ந்திராமல், சுயமாக தொழில் செய்து சம்பாதிக்கலாம்' என்றனர்.
